Sowmya and Aditi are my grand-daughters. Sowmya was born on May 17th, 2006 and Aditi, exactly a month later, on June 17th, 2006. This blog is all about them, the various stages in their life. From a grandfather's perspective and viewpoint. SRIRAM is the latest addition, born on 7 April 2008.
அர்விந்த் - கிருத்திகாவின் குழந்தை சி அர்ஜுன் 02-06-2012 அன்று பிறந்தான். இன்று (15-10-2013) அவனுக்கு 1 வயசு 4 மாஸங்கள் ஆகின்றன.
குழந்தை மிகவும் சமத்து. ரொம்ப சமத்து. சமீபத்தில் அவன் பேசும் பல வார்த்தைகளே தேன் சொட்டுகின்றன. அம்மா, அப்பா, அக்கா, பாட்டி, தாத்தா போன்ற வார்த்தைகள் பேசுகிறான். மற்ற எல்லாவற்றையும் சைகை மற்றும் முக ஜாடையிலேயே சொல்லி விடுகிறான்.
இன்று காலை அவன் dining table -ல் உட்கார்ந்து கொண்டு சாப்பிடும் அழகை பாருங்கள்.
குழந்தையுடைய ஆயுஷ்ஹோமம் மே 23-ஆம் தேதியன்று சிறப்பாக கொண்டாடினோம். அடுத்து அவனது பிறந்த நாளையும் கொண்டாட ஏற்பாடுகள் பண்ணினோம். மொட்டை மாடியில் கொண்டாட திட்டம். அர்விந்தும், கிருத்திகாவும் மும்முரமாக வேலைகள் செய்தனர். அர்விந்த் ஆஃபீஸ் நண்பர்கள், அக்கம்பக்கம் வீட்டார்கள் என 40 பேருக்கும் மேலாக அழைத்தனர். கேடரர் பழைய ராம் கேடரிங்தான். 02-06-2013 ஞாயிற்றுக்கிழமை. எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கும்போது, அன்று பகல் 4 மணிக்கு இருண்ட மேகங்கள் சூழ்ந்து மழை கொட்ட ஆரம்பித்தது. எனவே, விழாவை வீட்டிற்குள்ளேயே வைத்துக் கொண்டோம். 6-15 மணியிலிருந்து எல்லாரும் வர ஆரம்பித்தனர். சுதா, சந்தர், தனுஷ், தர்ஷிணி, ஜனனி, ராம், ப்ரத்யுன் ஆகியோர் வந்தனர். அதிதியின் பிறந்த நாளும் இன்னும் 15 நாளில் வருகிறபடியால் அவளது பிறந்த நாளும் இன்றே கொண்டாடப்பட்டது. இருவரும் கேக் வெட்டினார்கள்.
பின்னர் உணவு. குலாப்ஜாமூன், சப்பாத்தி, பனீர் பட்டர் மசாலா, பூரி, தால், புலவ், பச்சடி, கொத்தமல்லி சாதம், ப்ரிஞ்சி சாதம், சாம்பார் சாதம், தயிர்சாதம், சிப்ஸ், ஜூஸ், பீடா என்று ஏகப்பட்ட வகைகள். 30 பேர் சாப்பிட்டோம்.
9:30 மணிக்கு எல்லாரும் கிளம்பினர். இவ்வாறாக அர்ஜுன் மற்றும் அதிதியின் பிறந்த நாள் விழா சிறப்பாக நடந்தது. மழை காரணமாக ரொம்ப பேர் வராததால் சாப்பாடு நிறைய மீந்து விட்டது. தெருவில் உள்ள ஏழைகளை அழைத்து நிரம்ப உணவு அளித்தோம். காலை 07:30க்கு, அருகிலுள்ள ஸித்தி விநாயகர் கோயிலுக்கு எல்லாரும் (TSG, Mami) சென்று விநாயகருக்கு அபிஷேகம் செய்தோம். ராஜப்பா 03-06-2013
அர்விந்த் - கிருத்திகாவின் குழந்தை சி. அர்ஜுனின் ஆயுஷ்ஹோமம் 2013 மே மாஸம் 23 வியாழன்று சென்னை RK Mutt road@-ல் ஸ்வாமி ஹாலில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஒரு மாஸம் முன்னதாகவே அர்விந்தும் கிருத்திகாவும் ஆரம்பித்து விட்டனர். சாஸ்திரிகளுக்கு சொல்வது, caterer-உடன் பேசுவது என நானும் என் பங்கிற்கு வேலைகள் செய்தேன். பத்திரிகை LB road Mekala Invitationsல் அடிக்கப்பட்டது. எல்லாரையும் பத்திரிகை மூலமாகவும் ஃபோன் மூலமாகவும் அழைத்தோம் அருணும் அஷோக்கும் பெங்களூரிலிருந்து வந்தனர். 22-ஆம் தேதி விடியற்காலம் அருண் குடும்பத்தினரும், அன்று இரவு அஷோக் - நீரஜாவும் வந்தனர். நாங்களும் 14-ஆம் தேதியன்றே பெங்களூரிலிருந்து திரும்பி விட்டோம். மே 23, 2013 வியாழன் காலை 03 மணிக்கே எழுந்து கொண்டேன். எல்லாரும் சீக்கிரமே எழுந்து கொண்டு, குளித்து ரெடியானோம்.5-45க்கு 2 காரில் ஹாலுக்கு கிளம்பினோம். அது ஏஸி ஹால்.
உறவினர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். லலிதா-குமார், ஜனனி முதலில் வந்தனர். 6-45க்கு காலை சிற்றுண்டி - ரவா கேஸரி, இட்லி, பொங்கல், வடை. மும்பையிலிருந்து வைஷாலியும் விஷ்ணும் வந்தனர். சாஸ்திரிகள் மாமா 8 மணிக்கு வந்து ஆரம்பித்தார். அர்ஜுன் நீல கலரில் (ரெடிமேட்) வேஷ்டி போட்டுக் கொண்டான். சரோஜா, அத்திம்பேர், சுகவனம், பிரகாஷ், ராஜேஸ்வரி, சுபா, மகேஷ், விஜயராகவன், மாமி (சுதா ஆகியோர் ஊட்டியில் இருந்தார்கள், வரவில்லை), சுதன், இந்திரா, லக்ஷ்மி, பெண்கள், விஜயாவின் தோழி நாகலக்ஷ்மி ஆகியோர் வந்தனர். அர்விந்தின் ஆஃபீஸ்காரர்கள், மாமாவின் நண்பர்கள், மாமியின் உறவினர்கள் என 90 பேருக்கும் மேலாக வந்தனர்.
TSG தாத்தாவின் மடியில் உட்கார்ந்து கொண்டு அர்ஜுன் காது குத்திக் கொண்டான். விழா சுமார் 11 மணிக்கு நிறைவு பெற்றது. பின்னர் விருந்து. அம்பத்தூர் அருகில் உள்ள அயப்பாக்கத்திலிருந்து, ராமா கேடரர். நாங்கள் யாவரும் 12-15க்கு சாப்பிட்டோம்; பின்னர் வீடு திரும்பினோம். சுந்தரேசன், சாவித்திரி, மங்களம், ரமா, வாசு, பாமா ஃபோன் மூலம் ஆசிகள் கூறினார்கள். இப்படியாக, அர்ஜுன் ஆயுஷ்ஹோமம் மிக சிறப்பாக நடந்தேறியது. இரவு உணவு ஹோட்டலிலிருந்து வரவழைக்கப்பட்டது (அர்விந்த்) . சாப்பிட்ட பின்னர் 10:30க்கு அருண், அஷோக் ஆகியோர் பெங்களூர் கிளம்பினர். ராஜப்பா 25-05-2013
குழந்தைஅர்ஜுனுக்கு முடி இறக்குவதற்கு இரண்டு மாசங்களுக்கு முன்னதாக நாள் குறித்த போதிலும், அதை மூன்று முறை மாற்ற வேண்டியதாயிற்று. கடைசியில் மார்ச் 17-ஆம் தேதி கிளம்புவதாயும், 18-ஆம் தேதி (திங்கள்) முடி இறக்குவதாயும் நிச்சயித்தோம். ஏற்பாடுகள் பண்ணினோம். லாட்ஜுக்கு 18 ஃபிப் ஃபோன் பண்ணி 5 ரூம் கேட்டுக்கொண்டேன். துரை குருக்களுக்கும் ஃபோன் பண்ணி சொன்னேன். 9 மார்ச் TEMPO TRAVELLER (AC) க்கு சொன்னேன்; Balaji cabs, Besant nagar. அஷோக், நீரஜா பெங்களூரிலிருந்து 16-03 அன்று காலை வந்தனர். காயத்ரி படூரிலிருந்து ஸௌம்யா, ஸ்ரீராம் இவர்களை கூட்டிக் கொண்டு 16-03 காலை 10.00 மணிக்கும், அன்றிரவு அருண் பெங்களூரிலிருந்தும் வந்தனர். 17-03-2013 ஞாயிறு : காலை எல்லாரும் எழுந்து, குளித்து ரெடியானோம். சாப்பிட்டோம். TSG மாமா மாமியும் இங்கேயே சாப்பிட்டனர். 11.00 மணிக்கு van-ல் கிளம்பினோம். ECR-ல் பயணித்தோம். புதுச்சேரி ஸ்ரீ சத்குரு ஹோட்டலில் பகல் 2-45க்கு தோசை சாப்பிட நிறுத்தினோம். பின்னர் கிளம்பி நேராக சிதம்பரம் கோயிலில் மாலை 5-15க்கு நிறுத்தி ஸ்வாமி தரிஸனம் பண்ணிக் கொண்டோம்.
இரண்டு மணி நேரம் கழித்து, இரவிற்கு சாப்பிட சிதம்பரம் ஹோட்டலிலிருந்து இட்லி வாங்கி வந்து, வைத்தீஸ்வரன் கோயில், பாலாம்பிகா லாட்ஜை இரவு 9-30க்கு சென்று அடைந்தோம். 3 ஏஸி அறைகளும், 2 ஏஸி-இல்லாத அறைகளும் மொத்தம் 5 ரூம்கள் ஏற்பாடு செய்திருந்தேன். நாங்கள் இருவர், மாமா-மாமி இருவர் என இரண்டு ஏஸி-இல்லாத அறைகளில் தங்கினோம். அருண், அஷோக், அர்விந்த் ஆகியோர் ஏஸி அறைகளில் தங்கினர். இட்லி சாப்பிட்டு விட்டு தூங்கினோம். 18-03-2013, திங்கள் : வைத்தீஸ்வரன் கோயில். காலை சீக்கிரமே எழுந்து, காஃபி குடித்து, முடி இறக்கும் இடத்திற்கு சென்றோம்.7 மணி சுமாருக்குஅர்ஜுனுக்கு முடி இறக்கினோம். அஷோக் மடியில் உட்கார்ந்து கொண்டான். கொஞ்சம் அழுதான். 100.00
லாட்ஜுக்கு வந்து எல்லாரும் குளித்தோம். பிறகு டிஃபன். (மாவு விளக்கு போடும் விஜயா, காயத்ரி, நீரஜா ஆகியோர் சாப்பிடவில்லை) கோயிலுக்கு சென்று அம்மன் சன்னதியில் மாவு விளக்குபோட்டோம். அடுத்து, ஸ்ரீ துரை குருக்களை கண்டுபிடித்து, விநாயகர், ஸ்வாமி, அம்மன், முத்துக் குமாரஸ்வாமி, அங்காரகன் ஆகிய ஐவருக்கும் அர்ச்சனை பண்ணினோம் 500.00. மணி 11 ஆகியிருந்தது. இன்று முஹூர்த்த நாள் ஆனதால் கோயிலில் நிறையக் கல்யாணங்கள்; ஒரே கூட்டம். லாட்ஜுக்குத் திரும்பி வந்து, பக்கத்தில் உள்ள மெஸ்ஸில் சாப்பிட்டோம். சாப்பாடு நன்றாக இருந்தது (50.00 மட்டுமே). ரூம்களுக்கான பணம் செலுத்தி விட்டு, 12:30க்கு வைத்தீஸ்வரன் கோயிலை விட்டு கிளம்பினோம். எல்லாம் நன்றாக திட்டமிட்டபடியே நடந்து முடிந்தது. 2:30க்கு புதுச்சேரி சத்குரு ஹோட்டலில் இறங்கி காஃபி குடித்தனர். பின்னர் கிளம்பி ECR லிருந்து OMR க்கு மாறி படூர் சென்றோம். அங்கு அருண், காயத்ரி, குழந்தைகள் சௌம்யா, ஸ்ரீராம் ஆகியோரை இறக்கி விட்டு, மாலை 7-30க்கு திருவான்மியூர் வீடு திரும்பினோம். இரவு சாப்பாடு HOTCHIPS லிருந்து அர்விந்த் வாங்கி வந்தான். அஷோக் நீரஜா சாப்பிட்டு விட்டு, அருண் வருவதற்காக காத்திருந்தனர். படூரிலிருந்து அருண் வந்ததும், மூன்று பேரும் 10 மணி சுமாருக்கு டாக்ஸியில் ஸ்டேஷன் / பெங்களூர் புறப்பட்டுச் சென்றனர். இவ்வாறாக எங்கள் வைத்தீஸ்வரன் கோயில் பயணம் இனிதே முடிவுற்றது. எல்லாம் ஆண்டவன் அருள், ஆசிகள். ராஜப்பா 19-03-2013