skip to main |
skip to sidebar
அர்ஜுன்
அர்விந்த் - கிருத்திகாவின் குழந்தை சி அர்ஜுன் 02-06-2012 அன்று பிறந்தான். இன்று (15-10-2013) அவனுக்கு 1 வயசு 4 மாஸங்கள் ஆகின்றன.
குழந்தை மிகவும் சமத்து. ரொம்ப சமத்து. சமீபத்தில் அவன் பேசும் பல வார்த்தைகளே தேன் சொட்டுகின்றன. அம்மா, அப்பா, அக்கா, பாட்டி, தாத்தா போன்ற வார்த்தைகள் பேசுகிறான். மற்ற எல்லாவற்றையும் சைகை மற்றும் முக ஜாடையிலேயே சொல்லி விடுகிறான்.
இன்று காலை அவன் dining table -ல் உட்கார்ந்து கொண்டு சாப்பிடும் அழகை பாருங்கள்.
Arjun
ராஜப்பா
15-10-2013
அர்ஜுன் 2012, ஜூன் 2 அன்று பிறந்தான்.
குழந்தையுடைய ஆயுஷ்ஹோமம் மே 23-ஆம் தேதியன்று சிறப்பாக கொண்டாடினோம். அடுத்து அவனது பிறந்த நாளையும் கொண்டாட ஏற்பாடுகள் பண்ணினோம். மொட்டை மாடியில் கொண்டாட திட்டம். அர்விந்தும், கிருத்திகாவும் மும்முரமாக வேலைகள் செய்தனர். அர்விந்த் ஆஃபீஸ் நண்பர்கள், அக்கம்பக்கம் வீட்டார்கள் என 40 பேருக்கும் மேலாக அழைத்தனர். கேடரர் பழைய ராம் கேடரிங்தான்.
02-06-2013 ஞாயிற்றுக்கிழமை.
எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கும்போது, அன்று பகல் 4 மணிக்கு இருண்ட மேகங்கள் சூழ்ந்து மழை கொட்ட ஆரம்பித்தது. எனவே, விழாவை வீட்டிற்குள்ளேயே வைத்துக் கொண்டோம்.
6-15 மணியிலிருந்து எல்லாரும் வர ஆரம்பித்தனர். சுதா, சந்தர், தனுஷ், தர்ஷிணி, ஜனனி, ராம், ப்ரத்யுன் ஆகியோர் வந்தனர். அதிதியின் பிறந்த நாளும் இன்னும் 15 நாளில் வருகிறபடியால் அவளது பிறந்த நாளும் இன்றே கொண்டாடப்பட்டது. இருவரும் கேக் வெட்டினார்கள்.
பின்னர் உணவு. குலாப்ஜாமூன், சப்பாத்தி, பனீர் பட்டர் மசாலா, பூரி, தால், புலவ், பச்சடி, கொத்தமல்லி சாதம், ப்ரிஞ்சி சாதம், சாம்பார் சாதம், தயிர்சாதம், சிப்ஸ், ஜூஸ், பீடா என்று ஏகப்பட்ட வகைகள். 30 பேர் சாப்பிட்டோம்.
9:30 மணிக்கு எல்லாரும் கிளம்பினர். இவ்வாறாக அர்ஜுன் மற்றும் அதிதியின் பிறந்த நாள் விழா சிறப்பாக நடந்தது. மழை காரணமாக ரொம்ப பேர் வராததால் சாப்பாடு நிறைய மீந்து விட்டது. தெருவில் உள்ள ஏழைகளை அழைத்து நிரம்ப உணவு அளித்தோம்.
காலை 07:30க்கு, அருகிலுள்ள ஸித்தி விநாயகர் கோயிலுக்கு எல்லாரும் (TSG, Mami) சென்று விநாயகருக்கு அபிஷேகம் செய்தோம்.
ராஜப்பா
03-06-2013
அர்ஜுன் ஆயுஷ்ஹோமம்.
அர்விந்த் - கிருத்திகாவின் குழந்தை சி. அர்ஜுனின் ஆயுஷ்ஹோமம் 2013 மே மாஸம் 23 வியாழன்று சென்னை RK Mutt road@-ல் ஸ்வாமி ஹாலில் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை ஒரு மாஸம் முன்னதாகவே அர்விந்தும் கிருத்திகாவும் ஆரம்பித்து விட்டனர். சாஸ்திரிகளுக்கு சொல்வது, caterer-உடன் பேசுவது என நானும் என் பங்கிற்கு வேலைகள் செய்தேன். பத்திரிகை LB road Mekala Invitationsல் அடிக்கப்பட்டது. எல்லாரையும் பத்திரிகை மூலமாகவும் ஃபோன் மூலமாகவும் அழைத்தோம்
அருணும் அஷோக்கும் பெங்களூரிலிருந்து வந்தனர். 22-ஆம் தேதி விடியற்காலம் அருண் குடும்பத்தினரும், அன்று இரவு அஷோக் - நீரஜாவும் வந்தனர். நாங்களும் 14-ஆம் தேதியன்றே பெங்களூரிலிருந்து திரும்பி விட்டோம்.
மே 23, 2013 வியாழன்
காலை 03 மணிக்கே எழுந்து கொண்டேன். எல்லாரும் சீக்கிரமே எழுந்து கொண்டு, குளித்து ரெடியானோம்.5-45க்கு 2 காரில் ஹாலுக்கு கிளம்பினோம். அது ஏஸி ஹால்.
உறவினர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். லலிதா-குமார், ஜனனி முதலில் வந்தனர். 6-45க்கு காலை சிற்றுண்டி - ரவா கேஸரி, இட்லி, பொங்கல், வடை. மும்பையிலிருந்து வைஷாலியும் விஷ்ணும் வந்தனர். சாஸ்திரிகள் மாமா 8 மணிக்கு வந்து ஆரம்பித்தார். அர்ஜுன் நீல கலரில் (ரெடிமேட்) வேஷ்டி போட்டுக் கொண்டான்.
சரோஜா, அத்திம்பேர், சுகவனம், பிரகாஷ், ராஜேஸ்வரி, சுபா, மகேஷ், விஜயராகவன், மாமி (சுதா ஆகியோர் ஊட்டியில் இருந்தார்கள், வரவில்லை), சுதன், இந்திரா, லக்ஷ்மி, பெண்கள், விஜயாவின் தோழி நாகலக்ஷ்மி ஆகியோர் வந்தனர். அர்விந்தின் ஆஃபீஸ்காரர்கள், மாமாவின் நண்பர்கள், மாமியின் உறவினர்கள் என 90 பேருக்கும் மேலாக வந்தனர்.
TSG தாத்தாவின் மடியில் உட்கார்ந்து கொண்டு அர்ஜுன் காது குத்திக் கொண்டான். விழா சுமார் 11 மணிக்கு நிறைவு பெற்றது. பின்னர் விருந்து. அம்பத்தூர் அருகில் உள்ள அயப்பாக்கத்திலிருந்து, ராமா கேடரர். நாங்கள் யாவரும் 12-15க்கு சாப்பிட்டோம்; பின்னர் வீடு திரும்பினோம்.
சுந்தரேசன், சாவித்திரி, மங்களம், ரமா, வாசு, பாமா ஃபோன் மூலம் ஆசிகள் கூறினார்கள். இப்படியாக, அர்ஜுன் ஆயுஷ்ஹோமம் மிக சிறப்பாக நடந்தேறியது.
இரவு உணவு ஹோட்டலிலிருந்து வரவழைக்கப்பட்டது (அர்விந்த்) . சாப்பிட்ட பின்னர் 10:30க்கு அருண், அஷோக் ஆகியோர் பெங்களூர் கிளம்பினர்.
ராஜப்பா
25-05-2013