Friday, May 18, 2012

ஸௌம்யா 6-வது பிறந்த நாள்

ஸௌம்யாவிற்கும் அதிதிக்கும் இந்த மே - ஜூனில் 6 வயசு பூர்த்தியானது. ஸௌம்யாவிற்கு மே 17; அதிதிக்கு ஜூன் 17.

ஸௌம்யாவின் பிறந்த நாளை அருண்-காயத்ரி இந்த வருஷம் கேக் வெட்டி அவ்வளவு சிறப்பாக கொண்டாடவில்லை. மே 17 அன்று காலை 7 மணிக்கே நான், விஜயா, அதிதி, சாவித்திரி நால்வரும் 21-H AC பஸ்ஸில் படூர் கிளம்பினோம். அருண் வீட்டிற்கு சாவித்திரி வருவது இதுவே முதல் தடவை.






காலை சிற்றுண்டியும் பின்னர் மதிய சாப்பாடும் சாப்பிட்டோம். குழந்தைகள் மூவரும் நன்றாக விளையாடினர்.  மாலை 6-15க்கு எல்லாரும் (காயத்ரி, குழந்தைகள் உட்பட) 21H AC பஸ்ஸில் திருவான்மியூர் திரும்பினோம். 8-15 மணிக்கு அர்விந்த், கிருத்திகா, அருண், நாங்கள் எல்லாரும் 2 கார்களில் HOTEl ASCENDAS சென்றோம். GBS, மாமி, மீனா, சங்கர், குழந்தை இவர்கள் அங்கு வந்தனர். அங்கு தடபடலான விருந்து. நான் PASTA சாப்பிட்டேன். மற்றவர்கள், தோசை, இட்லி, PIZZA சாப்பிட்டார்கள்.

பின்னர் வீடு திரும்பும்போது இரவு மணி 10-30. அருண் ஆகியோர் அங்கிருந்தே படூர் கிளம்பினார்கள்.

இப்படியாக ஸௌம்யாவின் 6-வது பிறந்த நாள் சிறப்பாக நடந்தது. குழந்தைக்கு எங்கள் அன்பு ஆசிகள்.

ராஜப்பா
9:00 மணி
18-5-2012

Sunday, April 08, 2012

ஸௌம்யா, அதிதி இப்போது முதல் வகுப்பில் ...

ஸௌம்யாவிற்கும், அதிதிக்கும் தற்போது (ஏப்ரல், 2012) 5 3/4 வயசு ஆகிறது. இந்த மே மாதம் ஸௌம்யாவும், ஜுனில் அதிதியும் 6 வயது பூர்த்தியாகிறது.

இருவரும் ஜூன் 2012 முதல் FIRST Standard போகிறார்கள். படிப்பின் முதல் படியில் ஏற இருக்கும் இரண்டு குழந்தைகளுக்கும் ஸரஸ்வதியின் அருள் கிட்டட்டும்; நிறைய படித்து நன்றாக இருக்கட்டும்.

ஸௌம்யாவிற்கு ஜூன் 7-ம்,அதிதிக்கு ஜூன் 14-ம் ஸ்கூல் திறக்கிறது. ஸ்ரீராமிற்கு ஜூன் 7-ஆம் தேதி.

ராஜப்பா
05-04-2012
09:30 மணி

எல்லா ஃபோட்டோக்களும் எடுக்கப்பட்ட தினம் : 25 மார்ச் 2012












Following Photos Taken on June 12th, 2012 at Punyahavachanam







Tuesday, March 27, 2012

ஸ்ரீராம் 4-வது பிறந்த நாள்

ஸ்ரீராம் (அருண்) : 2008 ஏப்ரல் 7-ஆம் தேதியன்று சென்னையில் பிறந்தான். அவனுக்கு இந்த வருஷம் மார்ச் 25-ஆம் தேதியன்று (25-03-2012) ஜன்ம நக்ஷத்திரம் வந்தது. ஞாயிற்றுக்கிழமையாதலால் அன்றைக்கே பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாட அருண் - காயத்ரி நிச்சயித்தனர்.

முதல் நாள் மாலையில் ஸௌம்யா திருவான்மியூர் வந்து இங்கேயே இரவு தங்கிவிட்டாள். 25-ஆம் தேதி மாலை 4-15க்கு நாங்கள் யாவரும் படூர் கிளம்பினோம். ஸௌம்யா மற்றும் ஸ்ரீராமின் classmates மற்றும் குழந்தைகளின் அம்மா / அப்பா வந்தனர். மீனா, சங்கர், சாகேத் வந்தனர். அருண் ஸ்ரீராமிற்காக விசேஷமாக “Chota Bheem" கேக் வாங்கினான்.

Chota Bheem Cake






6-15 மணி சுமாருக்கு ஸ்ரீராம் கேக் வெட்டினான். French fries, Popcorn, sandwiches, juice, Gulab jamun, ice cream கொடுக்கப்பட்டது. அன்றிரவு உணவு அருண் வீட்டிலேயே சாப்பிட்டு விட்டு நாங்கள் (நான், விஜயா, அர்விந்த், கிருத்திகா, அதிதி) வீடு திரும்பினோம்.


ஸ்ரீராம் இந்த ஆண்டு LKG வகுப்பில் சேர்கிறான் (அதே PSBB ஸ்கூலில்). [அவனது பிறந்த தேதி [7-4-2012] அன்று அவன் துறையூரில் இருந்தான்}

ராஜப்பா
27-3-2012
0845 மணி