Monday, February 25, 2008

பேத்தி ஸௌம்யா Sowmya Hair Cut

First Hair cut
என்னுடைய பேத்தி ஸௌம்யாவிற்கு இரண்டாவது தடவையாக 24 செப்டம்பர் 2007-ல் அரியலூரில் முடியிறக்கப்பட்டது. (இங்கே படிக்கவும்) பிப்ரவரி 2008-ல் 5 மாசம் ஆகிவிட்டது. முடி மீண்டும் கட்டுக்கடங்காமல் வளர்ந்துள்ளது.

பிப் 23-ஆம் தேதியன்று அருண் அவளைக் கடைக்கு அழைத்துச் சென்று Hair Cut செய்தான். குழந்தையின் முகமே மாறிவிட்டது!

முன்னதாக பிப் 21 ஆம் தேதி ஸௌம்யா இங்கு வந்தாள். வாய் கொள்ளாமல் மழலையில் நிறைய பேசுகிறாள். அன்று எடுத்த போட்டோவிலும், Hair Cut ஆன பிறகு எடுத்த போட்டோவிலும் மாற்றத்தை பாருங்கள். Sowmya

On 21-2-2008, Before the Hair Cut

On 23-2-2008, AFTER the hair Cut

ராஜப்பா

12:40 25-2-2008

Wednesday, January 09, 2008

அதிதியும் அவள் நாணா தாத்தாவும்

இரண்டு நாட்களாக அதிதி வாய் ஓயாமல் "தாத்தா, தாத்தா", "பாட்டி, பாட்டீ" என்று கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறாள். நிறைய பேச்சு வந்துள்ளது. மழலையில் கொஞ்சுகிறாள். நானும், விஜயாவும் அந்த அமிழ்தத்தில் அள்ளூறி மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆண்டவனுக்கு நமஸ்காரங்கள்.






நேற்று (8 ஜனவரி) அதிதி என்னை திடீரென "நாணா தாத்தா, நாணா தாத்தா" எனக் கூப்பிட ஆரம்பித்தாள். நாராயணனை நாணா எனக் கூப்பிடுவது வழக்கம்தான் என்றாலும், என் அருமை பேத்தியின் மழலையில் கேட்க என்னவொரு ஆனந்தம் !! Aditi, Thatha


ராஜப்பா

10:45 காலை, 9 ஜனவரி 2008



Monday, December 31, 2007

Aditi Preparing for 2020 Olympics

Aditi went for a picnic / outing on Saturday the 15th December, 2007. There, on a hotel
pavement, she started walking at a very brisk pace, you can call it jogging or running.

Very happy, very excited, full of josh and vigour, ADITI is picture perfect and innocence personified, as infants of her age are supposed to be.

It is a visual treat. Watch her
http://video.google.com/videoplay?docid=4608442507557444793&pr=goog-sl


After such a strenous spell of jogging, Aditi was tired, naturally -- look at her::

rajappa
10:00 on 31 Dec