Monday, November 02, 2009

ஹரிஸ்ரீ வித்யாலயத்தில் அதிதி

இந்த வருஷம் அதிதியை ஹரிஸ்ரீ வித்யாலயம் என்னும் ஸ்கூலில் சேர்த்திருக்கிறோம். Pre-Primary Class. வீட்டிலிருந்து 1 1/4 கிமீ தூரத்தில் இருக்கும்.

ஸ்கூல் காலை 1045 - 1245 வரை. இங்கு பல புதிய விஷயங்களை பார்க்கிறேன்.
  • ட்ரெஸ் (பெண் குழந்தைகளுக்கு) பாவாடை - சட்டை தான். துணியை அவர்களிடமிருந்து வாங்கி நாம் தைத்துக் கொள்ளவேண்டும்.
  • டீச்சர்களை ஆசார்யா என்றுதான் அழைக்கவேண்டும். (Miss, Maam கூடாது)
  • ஆசார்யாக்களிடம் Good Morning, Good Evening சொல்லக்கூடாது. நமஸ்தே மட்டுமே சொல்லவேண்டும்.
  • சிறிய பாய் (தாங்களே) போட்டுக்கொண்டு தரையில் தான் உட்காரவேண்டும் - விளையாடும்போதும், வண்ணம் பூசும்போதும், சாப்பிடும்போதும்.
  • மதியம் வீடு திரும்பும்போது, 5 முறை ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் என உரத்த குரலில் சொல்லிவிட்டு கிளம்பவேண்டும்.

பாவாடை சட்டையில் அதிதி


ராஜப்பா
02-11-2009
1000 காலை

Friday, October 16, 2009

Sowmya - Aditi in Rajasthani dress

When we went to Jaipur recently (Oct 2009), we purchased typical Rajasthani dresses for Sowmya, Aditi, and Sriram. They enjoyed wearing the dresses; in fact, they insisted on wearing their new dresses the very next morning. Here are the photos of Sowmya & Aditi.




Sowmya


Sowmya


Aditi



Aditi


Aditi


rajappa
09:50 on 16-10-2009

Saturday, August 22, 2009

அதிதியின் முத்தான மழலைகள்

# 1. அதிதிக்கு நான் ராமாயணம் கதை சொல்வதுண்டு. ராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்னன் பிறந்ததிலிருந்து ராமாயணத்தை ஆரம்பித்து, விஸ்வாமித்திரருடன் காட்டிற்குச் சென்று அஸுரர்களை அழித்தது, அகலிகைக்கு சாப விமோசனம் அளித்தது, மிதிலைக்குச் சென்று, சிவ தனுஷை ஒடித்து ஸீதையை கல்யாணம் பண்ணிக்கொண்ட காட்சியை சொல்லிக் கொண்டிருந்தேன். உடனே, அதிதி தன் இனிய குரலில் பாடத்தொடங்கினாள் - “ஸீதா கல்யாண வைபோகமே, ராமா கல்யாண வைபோகமே..”

# 2. வழக்கம் போல அதிதிக்கு ராமாயணம் கதை சொல்லிக் கொண்டு இருந்தேன். ஸீதையை ராவணன் தூக்கிக்கொண்டு போனதையும், ஜடாயுவைப் பற்றியும் சொன்னபிறகு, நான்பாட்டுக்கு என்னையும் அறியாமலேயே, “அப்றம், ராமர், லக்ஷ்மணன், ஸீதை மூணு பேரும் அங்கேயிருந்து கிளம்பினா ..” என்று சொல்ல, உடனே இடைமறித்த அதிதி, “தாத்தா, ஸீதையைத்தான் அந்த ராக்ஷசன் தூக்கிண்டு போயிட்டானே” என என்னைத் திருத்தினாள்.

# 3. அடுத்த நாள், ஹனுமான் ஸீதையைத் தேடிக்கொண்டு லங்கா போனதையும், எல்லா இடத்திலும் தேடிப்பார்த்து கடைசியில் ஸீதாதேவியை அஷோகவனத்தில் பார்த்ததை அவளுக்கு சொல்லிக் கொண்டிருந்தேன். ஹனுமான் ஸீதையிடம், “நீங்கள் இங்கிருப்பதை நான் ஸ்ரீராமனிடம் போய் சொல்லுகிறேன்,” என்று சொன்னார் என சொன்னேன். உடனே அதிதி, “ஏன் தாத்தா, அவர்கிட்டே செல்ஃபோன் இல்லயா,ஃபோனிலேயே சொல்லிடலாமே” என்று கேட்டாள்!

குறிப்பு: அதிதியின் வயசு 3 முடிந்து 2 மாஸம்.

ராஜப்பா
22-8-2009 காலை 10:30 மணி