Showing posts with label Bhagvad Gita. Show all posts
Showing posts with label Bhagvad Gita. Show all posts

Saturday, October 20, 2012

பகவத் கீதை - 12-வது அத்தியாயம்.

அதிதியும் ஸௌம்யாவும் (இருவருக்கும் தற்போது ஏழு வயசு 5 மாஸம்) பகவத் கீதை ஸ்லோகங்கள் சொல்வதைப் பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன்.

அதிதி


ஸௌம்யா
2011ம் வருஷம் ஆகஸ்ட் 8-ஆம் தேதி அதிதி கீதை 11-ஆம் அத்தியாயம் சொல்வதை எழுதினேன்.

இப்போது இரண்டு மாஸங்களாக அத்தியாயம் 12 (பக்தி யோகம்)  சொல்லுகிறார்கள். “ஏவம் ஸதத-யுக்தா யே பக்தாஸ்” என ஆரம்பித்து, “மய்யேவ மன ஆதத்ஸ்வ” என சொல்லி, கடைசியில் ”ஸந்துஷ்ட: ஸததம் யோகீ யதாத்மா” என 14-ஆம் ஸ்லோகத்தில் முடிக்கிறார்கள்.

கீதாசாரியன் ஸ்ரீ கிருஷ்ணன் குழந்தைகளுக்கு அருள் புரிவார்.

கீதை 12ம் அத்தியாயம் சொல்லும் போட்டியில்
அதிதிக்கு 3-11-2012 அன்று கொடுத்த
மெடல்

ராஜப்பா
6:40 மாலை
20-10-2012

Monday, August 08, 2011

Gita 11th Chapter Slokas 1 to 11


First read this :: http://rajappa.blogspot.com/2010/08/blog-post_05.html

During last Aug - Oct 2010, Aditi started chanting the 11 Slokas [Srimadh Bhagavat Gita,Chapter 10, Slokas 1-11].

Now, last month (July 2011) she tells slokas from Chapter 11, Slokas 1 to 11[Vishvaroopadharsana Yogam].

"एकादशोध्याय:" "विश्वरूपद्र्र्शनयॉग:"

என முகவுரையுடன் துவங்கி,

मद अनु-ग्र्हाय परमम् गुह्यम अधि-आत् सम्-शित्म्

என ஆரம்பித்து, பொங்கும் காவிரியாக, கொட்டும் அருவியாக

पश्य आदित्यान वसून रुद्रान अश्विनॉ मरुत्: तथा


என்பது வரை சொல்லுகிறாள்.
 
கீதாசாரியனான ஸ்ரீகிருஷ்ணன் குழந்தைக்கு அருள் புரியட்டும்.
 
ராஜப்பா
08-08-2011

Friday, October 22, 2010

அதிதியின் கீதை ஸ்லோகங்கள்

நேற்று முதல் அதிதி இன்னும் இரண்டு கீதை ஸ்லோகங்களை சொல்கிறாள். முன்பு அவள் மூன்று ஸ்லோகங்கள் சொல்வதை ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி எழுதியிருந்தேன் (படிக்க).

அத் 10 --  ஸ்லோகம் 4 மற்றும் 5 தற்போது சொல்கிறாள். மொத்தம் ஐந்து ஸ்லோகங்கள்.

கீதாசாரியனின் அருள் குழந்தைக்கு கிட்டட்டும்.


ராஜப்பா
22-10-2010
10:40


x

Thursday, August 05, 2010

அதிதியின் கீதை ஸ்லோகங்கள்

போன வாரத்தில் ஒரு நாள் - ஸ்கூலிலிருந்து (ஹரிஸ்ரீ வித்யாலயா)   திரும்பிய அதிதி, “தாத்தா, ஒனக்கு ஒண்ணு சொல்றேன் கேளு” என்று ஆரம்பித்து, குற்றால அருவி சாரலாக, பொங்கிப் பெருகி வரும் காவிரியாக, மடமடவென்று எதையோ சொல்லி முடித்தாள்.

அவள் முகத்தில் வழக்கம்போல பெருமிதமும், குறும்பும் கொப்பளித்தன.  எனக்குத்தான் ஒன்றும் புரியவில்லை. “காத்தால நீ படிப்பியே, அந்த கீதை, தாத்தா” என்று விளக்கம் கொடுத்தாள். கீதை புஸ்தகத்தை எடுத்து INDEX ஐ புரட்டினாலும் அவள் என்ன சொல்கிறாள் என்பது புரியவில்லை.

 “ஸூர்ய ஏவ மஹாபாஹோ ..” என்பது ஆரம்பம் எனப் புரிந்தாலும், “ஸூர்ய” என்று ஆரம்பிக்கும் ஸ்லோகம் கீதையில் இல்லை.  எத்தனை முறை கேட்டாலும் அதிதி ஸூர்ய ஏவ என்றே ஆரம்பித்தாள்.

மறுநாள்தான் குழப்பம் நீங்கியது - அர்விந்த் ஸ்கூலிலிருந்து வந்ததும் “கீதையின் 10வது அத்தியாயம், முதல் 10 ஸ்லோகங்கள் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள்” என சொன்னான்.

                भुय एव महाबाहो श्रूणु मे परमम वच: ।

           यत्त ते अहम प्री-यमाणाय वच्-स्यामि हित-काम्यया ॥

இது அத்தியாயம் 10 -- ஸ்லோகம் 1.

பூய ஏவ என்பதை ஸூர்ய ஏவ என மழலையில் மாற்றிவிட்டாள். இதுவரை முதல் 3 ஸ்லோகங்கள் சொல்லி கொடுத்திருக்கிறார்கள். அதிதி தினமும் காலையில் என் பக்கத்தில் உட்கார்ந்து, “ஸூர்ய ஏவ” ஆரம்பித்து 3 ஸ்லோகங்களையும் மழலையில் சொல்லுவாள்.

கீதை அருளிய கிருஷ்ண பகவானே அந்த மழலையில் மனசை பறிகொடுத்து விடுவான் - பூய ஏவ == ஸூர்ய ஏவ என மாற்றப்பட்டால் என்ன !?

ராஜப்பா
05-08-2010
காலை 11.00 மணி