Showing posts with label paav bhaaji. Show all posts
Showing posts with label paav bhaaji. Show all posts

Wednesday, April 08, 2009

ஸ்ரீராமின் முதல் பிறந்த நாள் SRIRAM first Birthday



நேற்று (07 ஏப்ரல் 2009) ஸ்ரீராமின் முதல் பிறந்த நாளை வெகு சிறப்பாகக் கொண்டாடினோம்.

விஜயா, சதீஷ், நான் மாலை 5-30 மணிக்கு அருண் வீட்டிற்குப் போனோம். பின்னர் அதிதியும், கிருத்திகாவும் வந்தனர். 6-30 மணியிலிருந்து மற்ற உறவினர்கள் வர ஆரம்பித்தனர். பாலு மாமா, மாமி, மாமாவின் கும்பகோணம் தம்பி, தம்பி மனைவி, கிட்டா மாமா, ரேவதி, சாரதா, ஸ்ரேயா, சுகவனம், சுதா, சந்தர், தனுஷ், விஜயராகவன், மாமி வந்தனர். 7-30 மணிக்கு அர்விந்த் வந்தான்.


6-45க்கு ஸ்ரீராம் கேக் வெட்டினான். இசை மெழுகுவத்தி ஏற்றப்பட்டது. அருண் “பாவ் பாஜி” வாங்கிவந்தான் (ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கடையிலிருந்து). காயத்ரி பால் பாயஸம் பண்ணினாள்.

எல்லாரும் 8-30 மணிக்கு வீடு திரும்ப ஆரம்பித்தனர். நானும், விஜயாவும் அருண் வீட்டில் சாப்பிட்டோம்.

அர்விந்த், கிருத்திகா, அதிதி ஆகியோர் இன்னொரு பிறந்தநாள் விழாவிற்கு போய்விட்டு, இரவு 9-30க்கு திரும்பினர். அவர்களுடன் நாங்களும் 9-45க்கு வீடு திரும்பினோம்.

இவ்வாறாக குழந்தை ஸ்ரீராமின் முதல் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப் பெற்றது.

ராஜப்பா (Rajappa)
08-04-2009 காலை 12-25 மணி