Showing posts with label thatha. Show all posts
Showing posts with label thatha. Show all posts

Saturday, February 21, 2009

ஸ்ரீராம் “தாத்தா” சொல்கிறான் Sriram says Thatha

ஸ்ரீராம் தாத்தா சொல்கிறான். SRIRAM

ஸ்ரீராம் (07-04-2008) தற்போது “தாத்தா, தாத்தா”ன்னு நிறைய சொல்கிறான். எனக்கு மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. இரண்டு வருஷங்களுக்கு முன்பு, ஸௌம்யாவும், அதிதியும் தாத்தான்னு சொன்னபோது ஏற்பட்ட அதே சந்தோஷம் மீண்டும் இப்போது!

read this and this

ராஜப்பா Rajappa

2PM, 21 Feb

Wednesday, January 09, 2008

அதிதியும் அவள் நாணா தாத்தாவும்

இரண்டு நாட்களாக அதிதி வாய் ஓயாமல் "தாத்தா, தாத்தா", "பாட்டி, பாட்டீ" என்று கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறாள். நிறைய பேச்சு வந்துள்ளது. மழலையில் கொஞ்சுகிறாள். நானும், விஜயாவும் அந்த அமிழ்தத்தில் அள்ளூறி மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆண்டவனுக்கு நமஸ்காரங்கள்.






நேற்று (8 ஜனவரி) அதிதி என்னை திடீரென "நாணா தாத்தா, நாணா தாத்தா" எனக் கூப்பிட ஆரம்பித்தாள். நாராயணனை நாணா எனக் கூப்பிடுவது வழக்கம்தான் என்றாலும், என் அருமை பேத்தியின் மழலையில் கேட்க என்னவொரு ஆனந்தம் !! Aditi, Thatha


ராஜப்பா

10:45 காலை, 9 ஜனவரி 2008



Wednesday, October 24, 2007

தாத்தா - தாத்தா Aditi Sowmya

2007, ஜுன் மாசத்தில் எழுதினேன் - On Becoming a Thatha - என்று. அப்போது, பேத்திகள் ஸௌம்யா, அதிதி இருவரும், "தாத்தா எங்கே?" என்று கேட்டால், தங்கள் பிஞ்சு தளிர் விரல் நீட்டி என்னைக் காண்பிப்பார்கள் - என் மனசை அள்ளிக் கொண்டுப் போய்விடுவார்கள்.

சென்ற இரண்டு மாசங்களாக இருவருமே , அழகான தேன்மழலையில் "தாத்தா, தாத்தா" என ஓயாமல் என்னைக் கூப்பிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இன்பத்தேன் வந்து பாயுது என் காதினிலே. பிள்ளைக் கனியமுது, பேசும் பொற்சித்திரம் இரண்டு பேரும் சொல்லு மழலையிலே என் உள்ளம் குளிருது. (மஹாகவிக்கு என் நன்றிகள்).

தாத்தா ஆனவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். Aditi, Sowmya, Thatha

ராஜப்பா தாத்தா

அக்டோபர் 24, 2007

மாலை 7 மணி