Monday, March 10, 2008

அதிதி, ஸௌம்யா மழலையில் கொஞ்சுகிறார்கள் - Sowmya Aditi

சென்ற சில வாரங்களாகவே ஸௌம்யாவும், அதிதியும் மழலை பேசி எங்கள் யாவரையும் மகிழ்ச்சியில் மூழ்கடிக்கின்றனர். என்ன பேச்சு! வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். சின்னஞ்சிறு வார்த்தைகளில் பேசிய காலம் போய், தற்போது முழு முழு வாக்கியங்களை - நீண்ட நெடிதாக பேசி எங்களை ம்கிழ்விக்கின்றனர்.

சும்மாவா சொன்னார் திருவள்ளுவர் -
குழலினிது யாழினிது என்பர் மக்கள் தம் மழலைச் சொல் கேளாதவர்"
என்று? குழந்தைகளின் ம்ழலைச்சொல் கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

ராஜப்பா
10-3-2008 10AM