Tuesday, July 07, 2009

அதிதியின் டாக்டர் விளையாட்டு

தினமும் இரவு 9 அல்லது 9-30 மணியானால் அதிதி டாக்டர் விளையாட்டு ஆரம்பித்து விடுவாள். சில பேப்பர்கள், ஒரு பேனா, ஒரு டார்ச் வைத்துக்கொண்டு, ஒவ்வொரு பேஷண்ட்டாக கூப்பிடுவாள். முதல் சில நாட்களுக்கு “தாத்தா பேஷண்ட், பாட்டி பேஷண்ட்” என உறவுமுறை சொல்லிக் கூப்பிட்ட அவள், பின்னர் பெயர் சொல்லி கூப்பிட ஆரம்பித்து விட்டாள் - “நாராயணன் பேஷண்ட், விஜயா பேஷண்ட், கிருத்திகா பேஷண்ட் ..” தான் !

அவள் பக்கத்தில் போய் உட்கார வேண்டும் - “ஒங்க பேரு என்ன, ஒங்க வயசு என்ன, ஒங்களுக்கு என்ன ஆச்சு?” என தன் விசாரணையை ஆரம்பித்து, மருந்து அல்லது க்ரீம் எழுதித் தருவாள். “மம்மம் சாப்பிட்ட பிறகு மருந்து சாப்பிடு”, “3 நாளைக்கு சாப்பிடு”, என ஆலோசனைகள் தொடரும். பின் “25 ருப்பீஸ்” fees வாங்கிக்கொண்டு, அடுத்து , “விஜயா பேஷண்ட்” என கூப்பிடுவாள்.

அரைமணி நேரம் இனிமையாக கழியும்.

ராஜப்பா
10:40 மணி
07-07-2009