ஸ்கூல் காலை 1045 - 1245 வரை. இங்கு பல புதிய விஷயங்களை பார்க்கிறேன்.
- ட்ரெஸ் (பெண் குழந்தைகளுக்கு) பாவாடை - சட்டை தான். துணியை அவர்களிடமிருந்து வாங்கி நாம் தைத்துக் கொள்ளவேண்டும்.
- டீச்சர்களை ஆசார்யா என்றுதான் அழைக்கவேண்டும். (Miss, Maam கூடாது)
- ஆசார்யாக்களிடம் Good Morning, Good Evening சொல்லக்கூடாது. நமஸ்தே மட்டுமே சொல்லவேண்டும்.
- சிறிய பாய் (தாங்களே) போட்டுக்கொண்டு தரையில் தான் உட்காரவேண்டும் - விளையாடும்போதும், வண்ணம் பூசும்போதும், சாப்பிடும்போதும்.
- மதியம் வீடு திரும்பும்போது, 5 முறை ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் என உரத்த குரலில் சொல்லிவிட்டு கிளம்பவேண்டும்.
பாவாடை சட்டையில் அதிதி
ராஜப்பா
02-11-2009
1000 காலை