“ஏன் தாத்தா, ஃபோனிலேயே காமிரா இருக்குமே !?” - இது அவளது கேள்வி # 2. அந்த காலத்தில் பேசுவதற்கே ஃபோன் கிடையாது, என சிரித்தபடியே நான் சொன்னேன்.
”ஒண்ணுமே இல்லாட்டா என்ன, கம்ப்யூட்டரில் ஈ-மெயில் அனுப்பலாமே?” இது கேள்வி # 4.
நானும், விஜயாவும் சிரித்து விட்டோம்.
20 வருஷங்களுக்கு முன்பு இருந்த நிலமையை, குழந்தை அதிதி போன்றவர்களுக்கு எப்படி விளக்குவது?
ராஜப்பா
08:40 காலை
20-05-2011
முக்கிய பின் குறிப்பு: அதிதி சென்ற 10 தினங்களாக நீச்சல் கற்றுக் கொள்கிறாள்; இதுநாள் வரை, ட்யூப் கட்டிக் கொண்டு நீச்சல் பழகிய அவள் நேற்று ட்யூப் இல்லாமலேயே நிறைய நீச்சல் அடித்தாள் !!