அர்ஜுன் 2012, ஜூன் 2 அன்று பிறந்தான்.
குழந்தையுடைய ஆயுஷ்ஹோமம் மே 23-ஆம் தேதியன்று சிறப்பாக கொண்டாடினோம். அடுத்து அவனது பிறந்த நாளையும் கொண்டாட ஏற்பாடுகள் பண்ணினோம். மொட்டை மாடியில் கொண்டாட திட்டம். அர்விந்தும், கிருத்திகாவும் மும்முரமாக வேலைகள் செய்தனர். அர்விந்த் ஆஃபீஸ் நண்பர்கள், அக்கம்பக்கம் வீட்டார்கள் என 40 பேருக்கும் மேலாக அழைத்தனர். கேடரர் பழைய ராம் கேடரிங்தான்.
02-06-2013 ஞாயிற்றுக்கிழமை.
எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கும்போது, அன்று பகல் 4 மணிக்கு இருண்ட மேகங்கள் சூழ்ந்து மழை கொட்ட ஆரம்பித்தது. எனவே, விழாவை வீட்டிற்குள்ளேயே வைத்துக் கொண்டோம்.
6-15 மணியிலிருந்து எல்லாரும் வர ஆரம்பித்தனர். சுதா, சந்தர், தனுஷ், தர்ஷிணி, ஜனனி, ராம், ப்ரத்யுன் ஆகியோர் வந்தனர். அதிதியின் பிறந்த நாளும் இன்னும் 15 நாளில் வருகிறபடியால் அவளது பிறந்த நாளும் இன்றே கொண்டாடப்பட்டது. இருவரும் கேக் வெட்டினார்கள்.
பின்னர் உணவு. குலாப்ஜாமூன், சப்பாத்தி, பனீர் பட்டர் மசாலா, பூரி, தால், புலவ், பச்சடி, கொத்தமல்லி சாதம், ப்ரிஞ்சி சாதம், சாம்பார் சாதம், தயிர்சாதம், சிப்ஸ், ஜூஸ், பீடா என்று ஏகப்பட்ட வகைகள். 30 பேர் சாப்பிட்டோம்.
9:30 மணிக்கு எல்லாரும் கிளம்பினர். இவ்வாறாக அர்ஜுன் மற்றும் அதிதியின் பிறந்த நாள் விழா சிறப்பாக நடந்தது. மழை காரணமாக ரொம்ப பேர் வராததால் சாப்பாடு நிறைய மீந்து விட்டது. தெருவில் உள்ள ஏழைகளை அழைத்து நிரம்ப உணவு அளித்தோம்.
காலை 07:30க்கு, அருகிலுள்ள ஸித்தி விநாயகர் கோயிலுக்கு எல்லாரும் (TSG, Mami) சென்று விநாயகருக்கு அபிஷேகம் செய்தோம்.
ராஜப்பா
03-06-2013
Monday, June 03, 2013
Subscribe to:
Posts (Atom)