Tuesday, May 18, 2010

ஸௌம்யாவிற்கு இன்று நாலு வயசு ..

ஸௌம்யாவிற்கு\ நேற்று (17-05-2010) 4-வது பிறந்த நாள் மிக விமரிசையாக நடந்தேறியது.

விஜயாவும் நானும் மாலை 4-45க்கு அருண் வீட்டிற்குப் போனோம். அடுத்து, அர்விந்த், கிருத்திகா, அதிதி வந்தனர். பின்பு பாலு மாமா ஆகியோர் வந்தனர்.

 7 மணிக்கு ஸௌம்யா கேக் வெட்டினாள்; அதிதி மிகவும் உற்சாகத்துடன் அவளுக்கு உதவினாள். ஸ்ரீராமிற்கு கேக் வெட்டும் வரை பொறுமை இல்லை; கேக்கை வழித்து வழித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

அருண், காயத்ரி இருவரும் நல்ல ஏற்பாடு பண்ணியிருந்தார்கள். அவர்களையும் சேர்த்து 42 பேர் சாப்பிட்டனர். நல்ல கூட்டம். குலாப் ஜாமூன், சப்பாத்தி,தொட்டுக் கொள்ள டால், போன்ற மூன்று வகைகள், புலவ், பச்சடி, தயிர் சாதம், சில பேர்களுக்கு மட்டும் ஐஸ்கிரீம் .. விருந்து பிரமாதம். (சப்பாத்தி, டால் மட்டும் வெளியிலிருந்து வாங்கினோம்)

சரோஜா, அத்திம்பேர், சுகவனம், சதீஷ் வந்திருந்தனர்.

குழந்தை ஸௌம்யாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

(வரும் ஜூன் 17ஆம் தேதி அதிதியின் பிறந்த நாள்)

முக்கிய குறிப்பு: ஃபோட்டோக்கள் போன வாரம் எடுக்கப்பட்டவை; பிறந்த நாள் அன்று இல்லை



ராஜப்பா
10:15 காலை
18-05-2010

Monday, May 03, 2010

விளையாட்டுகள் மாறுகின்றன

ஏழெட்டு மாதங்களுக்கு முன்னால் அதிதி “டாக்டர் விளையாட்டு” விளையாடுவதில் மிகவும் ஆர்வமாக இருப்பாள். அவள்தான் “டாக்டர்” - நானோ, விஜயாவோ patients. வந்திருக்கும் நோயைப் பற்றி மட்டுமல்லாமல் என்னுடைய அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி பெயர்களையும் கேட்டு விட்டு ”மருந்து” தருவாள்.

பின்னர் இந்த விளையாட்டு மறந்து, ஸ்கூல் விளையாட்டு ஆரம்பித்தாள். அவள்தான் “ஆச்சார்யா” (ஆசிரியை) - நான் மாணவன். இந்த விளையாட்டுடன் கூடவே “ராமர், லக்ஷ்மணர்” விளையாட்டும், “கிருஷ்ணன் - பலராமன் - யசோதா” விளையாட்டும். அவள் ராமர், நான் லக்ஷ்மணன், விஜயா கௌசல்யா! கிருஷ்ணர் விளையாட்டில், அவள் கிருஷ்ணன், நான் பலராமன், விஜயா யசோதா. இந்த இரண்டு விளையாட்டின் போதும் அவள் என்னை மூச்சுக்கு மூச்சு “டா” போட்டுத்தான் பேசுவாள் (என்னடா பலராமா, என்னடா ல்க்ஷ்மணா).

தற்போது (ஏப்ரல் 2010) அவள் டான்ஸ் ஆடுவதில் மிகவும் ஆர்வம் காட்டுகிறாள். பழைய தமிழ் சினிமா பாடலகளை (”பிருந்தாவனமும் நந்தகுமாரனும்”) விஜயா பாட வேண்டும்; அவள் ஆடுவாள். நன்றாகவே ஆடுகிறாள்.

அடுத்த விளையாட்டு என்னவாக இருக்கும்?

ராஜப்பா
காலை 10:30
03-05-2010