Monday, May 03, 2010

விளையாட்டுகள் மாறுகின்றன

ஏழெட்டு மாதங்களுக்கு முன்னால் அதிதி “டாக்டர் விளையாட்டு” விளையாடுவதில் மிகவும் ஆர்வமாக இருப்பாள். அவள்தான் “டாக்டர்” - நானோ, விஜயாவோ patients. வந்திருக்கும் நோயைப் பற்றி மட்டுமல்லாமல் என்னுடைய அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி பெயர்களையும் கேட்டு விட்டு ”மருந்து” தருவாள்.

பின்னர் இந்த விளையாட்டு மறந்து, ஸ்கூல் விளையாட்டு ஆரம்பித்தாள். அவள்தான் “ஆச்சார்யா” (ஆசிரியை) - நான் மாணவன். இந்த விளையாட்டுடன் கூடவே “ராமர், லக்ஷ்மணர்” விளையாட்டும், “கிருஷ்ணன் - பலராமன் - யசோதா” விளையாட்டும். அவள் ராமர், நான் லக்ஷ்மணன், விஜயா கௌசல்யா! கிருஷ்ணர் விளையாட்டில், அவள் கிருஷ்ணன், நான் பலராமன், விஜயா யசோதா. இந்த இரண்டு விளையாட்டின் போதும் அவள் என்னை மூச்சுக்கு மூச்சு “டா” போட்டுத்தான் பேசுவாள் (என்னடா பலராமா, என்னடா ல்க்ஷ்மணா).

தற்போது (ஏப்ரல் 2010) அவள் டான்ஸ் ஆடுவதில் மிகவும் ஆர்வம் காட்டுகிறாள். பழைய தமிழ் சினிமா பாடலகளை (”பிருந்தாவனமும் நந்தகுமாரனும்”) விஜயா பாட வேண்டும்; அவள் ஆடுவாள். நன்றாகவே ஆடுகிறாள்.

அடுத்த விளையாட்டு என்னவாக இருக்கும்?

ராஜப்பா
காலை 10:30
03-05-2010

No comments:

Post a Comment