Friday, June 18, 2010

அதிதிக்கு இன்று நாலு வயசு

நேற்று (17-06-2010) வியாழக்கிழமை அதிதியின் 4-வது பிறந்த நாள். மிக விமரிசையாக வீட்டிலேயே கொண்டாடினோம்.

எனக்கு நாலு வயசு ..

அதிதி காலை 5-30 மணிக்கே எழுந்துவிட்டாள்; பிறந்த நாள் கொண்டாட்ட மகிழ்ச்சி. கிருத்திகாவும் அர்விந்தும் அவளுக்கு ஒரு “பெரிய” சைக்கிள் வாங்கியிருந்தனர். காலையில் திடீரென புத்தம்புது சைக்கிளைப் பார்த்ததும் அதிதியின் முகத்தில் ஒரே சந்தோஷம். உடனே சைக்கிளை ஓட்ட ஆரம்பித்துவிட்டாள்.

அதிதி தன் புது சைக்கிளில்

பிற்பகல் அர்விந்தும் கிருத்திகாவும் வீட்டை அலங்கரித்தனர். மாலை 5-15 க்கு முதல் விருந்தினர் நுழைந்தனர். எல்லாருமே அதிதியின் பள்ளிக்கூட நண்பர்கள். 4-வயசு மழலையர் பட்டாளம் !! அவர்கள் அம்மாக்களும் வந்திருந்தனர்.

அதிதி தன் வகுப்பு குழந்தைகளுடன்

குழந்தைகள் எல்லாரும் மாம்பழம்/ ஆரஞ்சு ஜூஸ் குடித்தபிறகு அதிதி கேக் வெட்டினாள். KATI ROLLS, PIZZA ROLLS, BISCUITS, ஓமப்பொடி கொடுத்தோம்.

தோட்டத்தில் musical chair போன்ற சில விளையாட்டுக்கள் நடந்தன. கடையிலிருந்து TATTOO போடும் ஒருவர் வந்து குழந்தைகளின் தோள்களிலும், முழங்கைகளிலும் வர்ணமயமாக TATTOO போட்டு விட்டார். குழந்தைகளுக்கு கும்மாளம்தான். ஏழு மணி சுமாருக்கு எல்லாரும் வீடு திரும்பினர்.

ஸௌம்யாவுடன் அதிதி

அதிதியின் பிறந்த நாள் விழா மிக நல்ல முறையில் நடந்தது. அர்விந்த் - கிருத்திகா சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

ஸ்ரீராமும் சேர்ந்து கொண்டான்

தில்லியிலிருந்து உஷா, கோபாலகிருஷ்ணன், விபா, வீணா ஆகியோர் கலந்து கொண்டனர். வாசுவும் கலந்து கொண்டான்.

அதிதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ராஜப்பா
காலை 11:00 மணி
18-06-2010

Wednesday, June 09, 2010

ஸௌம்யாவும் அதிதியும் LKG-யில்

ஸௌம்யாவும், அதிதியும் தற்போது (2010-11) LKG வகுப்பில் படிக்கின்றனர். அவர்களின் புதிய வகுப்பு 7 ஜூன் 2010 (திங்கள்) அன்று ஆரம்பித்தது.

ஸௌம்யா - அதிதி

அதிதிக்கு காலை 8-30 துவங்கி 11-30 வரை ஸ்கூல். “கிருஷ்ணா” என்ற செக்‌ஷனில் உள்ளாள். அவளது நெருங்கிய தோழி நேயா வேறு செக்‌ஷனில் (காவேரி) படிக்கிறாள். அதிதி தற்போது காலை 7 மணிக்கே எழுந்து, வேக வேகமாக (சிணுங்கிக் கொண்டே) தன் வேலைகளை முடித்து, பேருக்கு ஏதோ சாப்பிட்டு விட்டு, அர்விந்துடன் 8 மணிக்கு கிளம்பி விடுகிறாள். 12 அல்லது 12-30 மணிக்கு வீடு திரும்பி சாப்பிட்டு தூங்கி விடுகிறாள். கிருத்திகா சென்று அவளைக் கூட்டி வருகிறாள்.

ஸௌம்யாவிற்கு 9-00 துவங்கி மதியம் 2-30 வரை ஸ்கூல். SNACKS மற்றும் LUNCH எடுத்துக் கொண்டு குழந்தை ஸ்கூல் செல்கிறது. போகும்போது அருணும், வரும்போது காயத்ரியும் ஸ்கூலிற்கு செல்கின்றனர். 4 வயசு குழந்தைக்கு 5, 5 1/2 மணி நேர படிப்பு தேவையா? !

ராஜப்பா
9-6-2010
10:30 AM