ஸௌம்யா - அதிதி
அதிதிக்கு காலை 8-30 துவங்கி 11-30 வரை ஸ்கூல். “கிருஷ்ணா” என்ற செக்ஷனில் உள்ளாள். அவளது நெருங்கிய தோழி நேயா வேறு செக்ஷனில் (காவேரி) படிக்கிறாள். அதிதி தற்போது காலை 7 மணிக்கே எழுந்து, வேக வேகமாக (சிணுங்கிக் கொண்டே) தன் வேலைகளை முடித்து, பேருக்கு ஏதோ சாப்பிட்டு விட்டு, அர்விந்துடன் 8 மணிக்கு கிளம்பி விடுகிறாள். 12 அல்லது 12-30 மணிக்கு வீடு திரும்பி சாப்பிட்டு தூங்கி விடுகிறாள். கிருத்திகா சென்று அவளைக் கூட்டி வருகிறாள்.
ஸௌம்யாவிற்கு 9-00 துவங்கி மதியம் 2-30 வரை ஸ்கூல். SNACKS மற்றும் LUNCH எடுத்துக் கொண்டு குழந்தை ஸ்கூல் செல்கிறது. போகும்போது அருணும், வரும்போது காயத்ரியும் ஸ்கூலிற்கு செல்கின்றனர். 4 வயசு குழந்தைக்கு 5, 5 1/2 மணி நேர படிப்பு தேவையா? !
ராஜப்பா
9-6-2010
10:30 AM
No comments:
Post a Comment