Thursday, June 09, 2011

Aditi - Sowmya -Sriram in new academic Year 2011

அதிதியும், ஸௌம்யாவும் இந்த புதிய கல்வி ஆண்டில் (2011 ஜூன் - 2012 ஏப்ரல்) UKG சேர்ந்துள்ளனர். அதிதியின் வகுப்பு PP2 என அழைக்கப்படுகிறது.

அதிதி தன்னுடைய ஹரிஸ்ரீ வித்யாலயம் (ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கிறது) ஸ்கூலில் படிப்பை தொடர்கிறாள். ஜூன் 8-ஆம் தேதி (புதன்) ஸ்கூல் திறந்தது. காலை 8-30 மணி துவங்கி மதியம் 2-30 வரை வகுப்புகள் இருக்கும். 10-30 க்கு சாப்பிட சின்ன சிற்றுண்டியும், மீண்டும் 12-30க்கு சாப்பிட உணவும் குழந்தை எடுத்துச் செல்கிறாள். தானே சாப்பிடுகிறாள்.

ஸ்கூலிற்கு கிளம்பும் முன்னர்,
பாட்டியுடன் சேர்ந்து ஸ்லோகம் சொல்லுகிறாள்.
காலை மணி 07:46

காலை சிற்றுண்டி, மணி 07:48


பகல் 3-15க்கு சோர்ந்து, களைத்து குழந்தை வீடு திரும்புகிறாள். பாவமாக இருக்கிறது.

ஸௌம்யாவும், ஸ்ரீராமும் OMR-ல் சிறுசேரியில் புதிதாக இந்த ஆண்டு திறக்கப்பட்ட PSBB (பத்மா சேஷாத்திரி பால பவன்) ஸ்கூலில் சேர்ந்துள்ளனர். ஜூன் 20-ஆம் தேதி திறக்கிறது. ஸௌம்யாவிற்கு ஸ்கூல் காலை 8-15க்கு துவங்கி, மதியம் 3-00 வரை இருக்கும்.

குழந்தைகள் பாவம்.

ராஜப்பா
11:15 மணி
9-6-2011

Friday, May 20, 2011

Q - A session with my grand-daughter Aditi

நேற்றிரவு (19-05-2011) அதிதி என்னிடம் வந்து, “தாத்தா, ஒன்னோட சின்ன வயசு ஃபோட்டோ இருக்கா?” எனக் கேட்டாள். அந்த காலத்தில் காமிராவே கிடையாது என பதில் சொன்னேன்.


“ஏன் தாத்தா, ஃபோனிலேயே காமிரா இருக்குமே !?” - இது அவளது கேள்வி # 2. அந்த காலத்தில் பேசுவதற்கே ஃபோன் கிடையாது, என சிரித்தபடியே நான் சொன்னேன்.

“பேசமுடியாட்டா என்ன, மெஸேஜ் குடுக்கலாமே தாத்தா !?” இது கே # 3. ஏதோ சொல்லி மெஸேஜ் குடுக்க முடியாது என சமாளித்தேன்.

”ஒண்ணுமே இல்லாட்டா என்ன, கம்ப்யூட்டரில் ஈ-மெயில் அனுப்பலாமே?”  இது கேள்வி # 4.

நானும், விஜயாவும் சிரித்து விட்டோம்.

20 வருஷங்களுக்கு முன்பு இருந்த நிலமையை, குழந்தை அதிதி போன்றவர்களுக்கு எப்படி விளக்குவது?

ராஜப்பா
08:40 காலை
20-05-2011

முக்கிய பின் குறிப்பு:  அதிதி சென்ற 10 தினங்களாக நீச்சல் கற்றுக் கொள்கிறாள்; இதுநாள் வரை, ட்யூப் கட்டிக் கொண்டு நீச்சல் பழகிய அவள் நேற்று ட்யூப் இல்லாமலேயே நிறைய நீச்சல் அடித்தாள் !!

Wednesday, May 18, 2011

Sowmya's 5th Birthday


Sowmya celebrated her 5th birthday (b:17-05-2006) yesterday at her house. It was a simple function. Her close classmates and a few relatives were present to greet and wish the child.
After the usual cake cutting (cake was from Cake Walk, on 2nd Avenue, Besant nagar), a piece of cake, pizza, and ice cream was served. Later, chappati, channa masala, aloo-gobi curry was served for dinner.






Apart from Arun's family, Vijaya, Krithika, Aditi, I (Arvind has gone on tour), Sudha and family, Meena, Sankar, Saaket, Krishnamurthy, Sriya, Sarada attended the function.





rajappa
10:50 AM
18-05-2011