குழந்தை அர்ஜுனுக்கு முடி இறக்குவதற்கு இரண்டு மாசங்களுக்கு முன்னதாக நாள் குறித்த போதிலும், அதை மூன்று முறை மாற்ற வேண்டியதாயிற்று. கடைசியில் மார்ச் 17-ஆம் தேதி கிளம்புவதாயும், 18-ஆம் தேதி (திங்கள்) முடி இறக்குவதாயும் நிச்சயித்தோம்.
ஏற்பாடுகள் பண்ணினோம். லாட்ஜுக்கு 18 ஃபிப் ஃபோன் பண்ணி 5 ரூம் கேட்டுக்கொண்டேன். துரை குருக்களுக்கும் ஃபோன் பண்ணி சொன்னேன். 9 மார்ச் TEMPO TRAVELLER (AC) க்கு சொன்னேன்; Balaji cabs, Besant nagar.
அஷோக், நீரஜா பெங்களூரிலிருந்து 16-03 அன்று காலை வந்தனர். காயத்ரி படூரிலிருந்து ஸௌம்யா, ஸ்ரீராம் இவர்களை கூட்டிக் கொண்டு 16-03 காலை 10.00 மணிக்கும், அன்றிரவு அருண் பெங்களூரிலிருந்தும் வந்தனர்.
17-03-2013 ஞாயிறு :
காலை எல்லாரும் எழுந்து, குளித்து ரெடியானோம். சாப்பிட்டோம். TSG மாமா மாமியும் இங்கேயே சாப்பிட்டனர். 11.00 மணிக்கு van-ல் கிளம்பினோம். ECR-ல் பயணித்தோம். புதுச்சேரி ஸ்ரீ சத்குரு ஹோட்டலில் பகல் 2-45க்கு தோசை சாப்பிட நிறுத்தினோம். பின்னர் கிளம்பி நேராக சிதம்பரம் கோயிலில் மாலை 5-15க்கு நிறுத்தி ஸ்வாமி தரிஸனம் பண்ணிக் கொண்டோம்.
இரண்டு மணி நேரம் கழித்து, இரவிற்கு சாப்பிட சிதம்பரம் ஹோட்டலிலிருந்து இட்லி வாங்கி வந்து, வைத்தீஸ்வரன் கோயில், பாலாம்பிகா லாட்ஜை இரவு 9-30க்கு சென்று அடைந்தோம். 3 ஏஸி அறைகளும், 2 ஏஸி-இல்லாத அறைகளும் மொத்தம் 5 ரூம்கள் ஏற்பாடு செய்திருந்தேன். நாங்கள் இருவர், மாமா-மாமி இருவர் என இரண்டு ஏஸி-இல்லாத அறைகளில் தங்கினோம். அருண், அஷோக், அர்விந்த் ஆகியோர் ஏஸி அறைகளில் தங்கினர். இட்லி சாப்பிட்டு விட்டு தூங்கினோம்.
18-03-2013, திங்கள் : வைத்தீஸ்வரன் கோயில்.
காலை சீக்கிரமே எழுந்து, காஃபி குடித்து, முடி இறக்கும் இடத்திற்கு சென்றோம். 7 மணி சுமாருக்கு அர்ஜுனுக்கு முடி இறக்கினோம். அஷோக் மடியில் உட்கார்ந்து கொண்டான். கொஞ்சம் அழுதான். 100.00
லாட்ஜுக்கு வந்து எல்லாரும் குளித்தோம். பிறகு டிஃபன். (மாவு விளக்கு போடும் விஜயா, காயத்ரி, நீரஜா ஆகியோர் சாப்பிடவில்லை) கோயிலுக்கு சென்று அம்மன் சன்னதியில் மாவு விளக்கு போட்டோம்.
அடுத்து, ஸ்ரீ துரை குருக்களை கண்டுபிடித்து, விநாயகர், ஸ்வாமி, அம்மன், முத்துக் குமாரஸ்வாமி, அங்காரகன் ஆகிய ஐவருக்கும் அர்ச்சனை பண்ணினோம் 500.00. மணி 11 ஆகியிருந்தது. இன்று முஹூர்த்த நாள் ஆனதால் கோயிலில் நிறையக் கல்யாணங்கள்; ஒரே கூட்டம்.
லாட்ஜுக்குத் திரும்பி வந்து, பக்கத்தில் உள்ள மெஸ்ஸில் சாப்பிட்டோம். சாப்பாடு நன்றாக இருந்தது (50.00 மட்டுமே). ரூம்களுக்கான பணம் செலுத்தி விட்டு, 12:30க்கு வைத்தீஸ்வரன் கோயிலை விட்டு கிளம்பினோம். எல்லாம் நன்றாக திட்டமிட்டபடியே நடந்து முடிந்தது.
2:30க்கு புதுச்சேரி சத்குரு ஹோட்டலில் இறங்கி காஃபி குடித்தனர். பின்னர் கிளம்பி ECR லிருந்து OMR க்கு மாறி படூர் சென்றோம். அங்கு அருண், காயத்ரி, குழந்தைகள் சௌம்யா, ஸ்ரீராம் ஆகியோரை இறக்கி விட்டு, மாலை 7-30க்கு திருவான்மியூர் வீடு திரும்பினோம். இரவு சாப்பாடு HOTCHIPS லிருந்து அர்விந்த் வாங்கி வந்தான். அஷோக் நீரஜா சாப்பிட்டு விட்டு, அருண் வருவதற்காக காத்திருந்தனர். படூரிலிருந்து அருண் வந்ததும், மூன்று பேரும் 10 மணி சுமாருக்கு டாக்ஸியில் ஸ்டேஷன் / பெங்களூர் புறப்பட்டுச் சென்றனர்.
இவ்வாறாக எங்கள் வைத்தீஸ்வரன் கோயில் பயணம் இனிதே முடிவுற்றது. எல்லாம் ஆண்டவன் அருள், ஆசிகள்.
ராஜப்பா
19-03-2013
Tuesday, March 19, 2013
Saturday, October 20, 2012
பகவத் கீதை - 12-வது அத்தியாயம்.
அதிதியும் ஸௌம்யாவும் (இருவருக்கும் தற்போது ஏழு வயசு 5 மாஸம்) பகவத் கீதை ஸ்லோகங்கள் சொல்வதைப் பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன்.
இப்போது இரண்டு மாஸங்களாக அத்தியாயம் 12 (பக்தி யோகம்) சொல்லுகிறார்கள். “ஏவம் ஸதத-யுக்தா யே பக்தாஸ்” என ஆரம்பித்து, “மய்யேவ மன ஆதத்ஸ்வ” என சொல்லி, கடைசியில் ”ஸந்துஷ்ட: ஸததம் யோகீ யதாத்மா” என 14-ஆம் ஸ்லோகத்தில் முடிக்கிறார்கள்.
கீதாசாரியன் ஸ்ரீ கிருஷ்ணன் குழந்தைகளுக்கு அருள் புரிவார்.
ராஜப்பா
6:40 மாலை
20-10-2012
அதிதி
ஸௌம்யா
2011ம் வருஷம் ஆகஸ்ட் 8-ஆம் தேதி அதிதி கீதை 11-ஆம் அத்தியாயம் சொல்வதை எழுதினேன்.இப்போது இரண்டு மாஸங்களாக அத்தியாயம் 12 (பக்தி யோகம்) சொல்லுகிறார்கள். “ஏவம் ஸதத-யுக்தா யே பக்தாஸ்” என ஆரம்பித்து, “மய்யேவ மன ஆதத்ஸ்வ” என சொல்லி, கடைசியில் ”ஸந்துஷ்ட: ஸததம் யோகீ யதாத்மா” என 14-ஆம் ஸ்லோகத்தில் முடிக்கிறார்கள்.
கீதாசாரியன் ஸ்ரீ கிருஷ்ணன் குழந்தைகளுக்கு அருள் புரிவார்.
கீதை 12ம் அத்தியாயம் சொல்லும் போட்டியில்
அதிதிக்கு 3-11-2012 அன்று கொடுத்த
மெடல்
ராஜப்பா
6:40 மாலை
20-10-2012
Monday, June 18, 2012
அதிதியின் 6-வது பிறந்த நாள்.
அதிதிக்கு ஜுன் 17-ஆம் தேதி பிறந்த நாள். இப்போது (2012-ல்) 6 வயசு பூர்த்தி ஆயிற்று.
வீட்டில் குழந்தை (அர்ஜுன்) பிறந்து 15 நாட்களே ஆகியிருப்பதாலும், கிருத்திகா பிரசவித்து தேறி வருவதாலும், இந்த வருஷம் அதிதியின் பிறந்த நாளை நிறைய கொண்டாட வில்லை. காலையில் அவளுக்கு புது டிரெஸ் போட்டுவிட்டோம்; விஜயா பாயஸம் பண்ணினாள். சுதன் குழந்தை ஹர்ஷிதா வந்தாள்.
திடீரென மாலை அர்விந்த் ஏற்பாடுகள் பண்ண ஆரம்பித்தான். அருண், காயத்ரி, ஸௌம்யா, ஸ்ரீராம் ஆகியோர் வந்தனர். அருண் வரும்போது கேக் வாங்கி வந்தான் [ இது அதிதிக்குத் தெரியாது]. ப்ரத்யுன், ராம், ஜனனி வந்தனர். TSG மாமா-மாமியும் வந்தனர். கிருத்திகாவும், குழந்தை அர்ஜுனைத் தூக்கிக் கொண்டு வந்தாள்.
இவ்வளவு பேர் சூழ்ந்திருக்க, அதிதி கேக் வெட்டினாள்; SURPRISE ஆக இருந்ததால் அவளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. சாப்பிட PIZZA CORNER லிருந்து அர்விந்த் ஆர்டர் பண்ணினான். ஏழு மணிக்கே ஆர்டர் பண்ணியும் இரவு 9-15 வரை PIZZA வரவே இல்லை. பின்னர் அர்விந்த் HOT CHIPS கடைக்குப் போய் இட்லி, மசால் தோசை, பூரி ஆகியவைகளை வாங்கி வந்தான்; எல்லாரும் சாப்பிட்டு முடிக்க இரவு 10 மணிக்கு மேல் ஆயிற்று. 10-30 க்கு அருண் குடும்பம், ஜனனி குடும்பம் வீடு திரும்பினர்.
கடைசியில் அதிதியின் 6-வது பிறந்த நாள் விழா நன்றாகவே நடந்தது. அதிதிக்கு எங்கள் அன்பு ஆசிகள்.
ராஜப்பா
18-6-2012
9:00 மணி

Subscribe to:
Posts (Atom)