இப்பல்லாம் அதிதிக்கு என்ன ஆசை தெரியுமோ? Aditi
கம்ப்யூட்டர் முன்னாடி ஒக்காந்திண்டு போட்டோ பாத்திண்டே இருக்கணும்.
நானோ, இல்லை விஜயாவோ கம்ப்யூட்டர் முன்னாடி ஒக்காந்தா போச்சு - ஓடி வந்து மடியிலே ஒக்காந்து கொள்வா. வலது கை சுட்டு வெரலை நீட்டி நீட்டி மானிட்டரை காமிப்பா- இதுக்கு அர்த்தம், "போட்டோ காமி!" Picasa போட்டு போட்டோ காமிச்சாதான் ஆச்சு.
போட்டோவையெல்லாம் ஒண்ணொண்ணா பாப்பா; தெனம் தெனம் பாத்த போட்டோதானேன்னு அலக்ஷியம் பண்ண மாட்டா.
அவ போட்டோ வரும்போதெல்லாம் "நான், நான்"னு தொட்டு தொட்டு காமிச்சுப்போ. ஸௌம்யா போட்டோ வந்தா இவ மூஞ்சியை பாக்கணுமே - ஒரே புன்சிரிப்புதான்! அப்பிடி ஒரு சந்தோஷம்.
இந்த சந்தோஷமான நிமிஷங்களுக்கு என்ன வெலை கொடுக்க முடியும் !!
GOD, I Thank you.
God Bless the Children Aditi and Sowmya
ராஜப்பா
11:50 on 3 Aug 2007
Monday, August 13, 2007
பேத்தி ஸௌம்யா Sowmya
நேற்று (12 ஆகஸ்ட்) பகல் 4 மணிக்கு நான் அசந்து தூங்கி கொண்டிருந்தேன்; திடீரென யாரோ என் முகத்தை கையால் தொடுவது போன்ற உணர்ச்சி. சின்னக் குழந்தையின் கை. எப்பொழுதும் அதிதி பாப்பு தான் இது போன்று செய்வாள், இப்போதும் அவள்தான் என நினைத்து, "பாப்பு !" என கூப்பிட்டவாறே கண்களை திறந்தால் ---- முகம் முழுதும் சிரிப்பாக, என்னுடைய முதல் பேத்தி ஸௌம்யா !!
குழந்தையை நான் ஜூலை 23-ஆம் தேதியன்று பார்த்ததுதான். நடுவில் நான் பெங்களூர் போய் விட்டேன். சென்னை திரும்பியதும் குழந்தையைப் போய் பார்க்கவில்லை.
அவள் LOOSE MOTIONல் சில நாட்கள் அவஸ்தைப்பட்டாள் - மிகவும் சோர்ந்து போய், மெலிந்து விட்டாள். மனசுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. தற்போது தேறி வருகிறாள். நேற்று அவளைப் பார்த்தபொழுது, முன்னேறியிருப்பது தெரிந்தது. 20 நாட்களாக குழந்தையை பார்க்காத ஏக்கம் நேற்று மத்யானம் தீர்ந்தது.
நிறைய வார்த்தைகள் பேசுகிறாள். 4 பல் வந்துள்ளது. பாட்டி கொடுத்த பாயசத்தை ஆசை ஆசையாக சாப்பிட்டாள். சமத்து குழந்தை. Sowmya
God Bless Her. Sowmya and Aditi
ராஜப்பா
10:30 13 ஆகஸ்ட் 2007

Friday, August 10, 2007
பேத்தியா, பேரனா?
எங்களுக்கு மூன்றாவது பேரக்குழந்தை பிறக்க இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை காயத்ரி இன்று (ஆகஸ்ட் 10) சொன்னாள். மிகவும் சந்தோஷமாக உள்ளது. வரும் 2008 ஏப்ரல் - மே மாசத்தில் பிறக்கும்.
மீண்டும் பேத்தியா? அல்லது பேரனா? பேத்தியோ, பேரனோ, இரண்டும் சமம்.
ஸௌம்யாவும், அதிதியும் அக்கா ஆகப் போகிறார்கள்.
எல்லாரையும் கடவுள் ஆசீர்வதிக்கட்டும். Aditi Sowmya
மீண்டும் தாத்தாவாகப் போகும்,
ராஜப்பா
10:10 am on 10-8-2007
Sowmya, Aditi

Subscribe to:
Posts (Atom)