Monday, August 13, 2007

பேத்தி ஸௌம்யா Sowmya

நேற்று (12 ஆகஸ்ட்) பகல் 4 மணிக்கு நான் அசந்து தூங்கி கொண்டிருந்தேன்; திடீரென யாரோ என் முகத்தை கையால் தொடுவது போன்ற உணர்ச்சி. சின்னக் குழந்தையின் கை. எப்பொழுதும் அதிதி பாப்பு தான் இது போன்று செய்வாள், இப்போதும் அவள்தான் என நினைத்து, "பாப்பு !" என கூப்பிட்டவாறே கண்களை திறந்தால் ---- முகம் முழுதும் சிரிப்பாக, என்னுடைய முதல் பேத்தி ஸௌம்யா !!

குழந்தையை நான் ஜூலை 23-ஆம் தேதியன்று பார்த்ததுதான். நடுவில் நான் பெங்களூர் போய் விட்டேன். சென்னை திரும்பியதும் குழந்தையைப் போய் பார்க்கவில்லை.

அவள் LOOSE MOTIONல் சில நாட்கள் அவஸ்தைப்பட்டாள் - மிகவும் சோர்ந்து போய், மெலிந்து விட்டாள். மனசுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. தற்போது தேறி வருகிறாள். நேற்று அவளைப் பார்த்தபொழுது, முன்னேறியிருப்பது தெரிந்தது. 20 நாட்களாக குழந்தையை பார்க்காத ஏக்கம் நேற்று மத்யானம் தீர்ந்தது.


நிறைய வார்த்தைகள் பேசுகிறாள். 4 பல் வந்துள்ளது. பாட்டி கொடுத்த பாயசத்தை ஆசை ஆசையாக சாப்பிட்டாள். சமத்து குழந்தை. Sowmya



God Bless Her. Sowmya and Aditi


ராஜப்பா

10:30 13 ஆகஸ்ட் 2007

No comments:

Post a Comment