Tuesday, November 20, 2007

தயிர் அபிஷேகம் ADITI

கிட்டத்தட்ட ஒரு மாசம் ஆகப்போகிறது - பேத்திகளைப் பற்றி எழுதி ! இந்த ஒரு மாசத்தில் வழக்கம் போல இருவரிடமும் மிக விரைவான முன்னேற்றங்கள். அதிதிக்கு கீழே 4 பல்லும், மேலே 4 பல்லும் வந்துவிட்டன; ஸௌம்யாவிற்கு கீழே 4 பல் வந்துடுத்து. மேலே 2 தான்.

பேச்சு நெறய்ய வந்திண்டிருக்கு. சாப்பாட்டிலும் நல்ல முன்னேற்றம் - ஸௌம்யா காய்கறிகளோடதான் சாப்பிடறா. ஏதாவது காய் இருந்தே ஆகணும். அதிதியும் காய் சாப்பிட ஆரம்பிச்சுட்டா.

ரெண்டு பேருக்கும் தயிர் ரொம்பவே பிடிச்சிருக்கு; கிண்ணத்திலே நெறய தயிரை விட்டுண்டு, ஒரு ஸ்பூனாலே அதை எடுத்து அவங்க சாப்பிடற அழகைப் பாக்க ரெண்டு கண்ணு போதாது - கீழ கொட்டி, சட்டை மேல, உடம்பு முழுக்க ஊத்திண்டு, மூஞ்சி பூரா அப்பிண்டு, அம்மனுக்கு தயிர் அபிஷேகம் பண்ணினாப் போல - ரசித்து, ருசித்து அவங்க தயிர் சாப்பிடற அந்தக் காட்சி, ஓ, காணக் கண் கோடி வேணும். Aditi, Sowmya

ராஜப்பா
12 பகல், 20 நவ 2007

No comments:

Post a Comment