Sunday, October 05, 2008

பேத்திகளின் மழலை முத்துக்கள்

பேத்திகளின் மழலை முத்துக்கள்.
Sowmya, Aditi, Easychair

# 1. "ஒங்க வீட்டிலே தாத்தா-பாட்டி இருக்கா மாதிரி, என்னோட வீட்டிலேயும் தாத்தா-பாட்டி இருக்காளே!"

இது தனுஷிடம் ஸௌம்யா பெருமையுடன் சொன்னது. இந்தக் குழந்தைகளுக்குத்தான் தாத்தா-பாட்டி மேலே என்ன பெருமை! நாங்கள் ஸௌம்யாவின் வீட்டில் எப்போதும் இருப்பதில்லை என்ற வருத்தமும் குழந்தையின் இந்த செயல்பாட்டில் தெரிகிறது.

# 2. "நீயும் பெங்களூர் போயிட்டு வாயேன்," என்று ஸௌம்யாவிடம் சொன்னபோது, கன்னத்தில் கையை வைத்துக்கொண்டாள் - "பெங்களூருக்கு போலாமா, இல்லே இங்கேயே இருக்கலாமா, யோசிச்சிண்டு இருக்கேன் !"

# 3. "என்னோட பேசு தாத்தா," அதிதி சொன்னபோது 'நான் இங்கேதானே பேசிண்டு இருக்கேன்"னு பதில் சொன்னேன். "என் பக்கத்திலே உக்காந்திண்டு என்னோட பேசு தாத்தா !" - இது அதிதியின் மறுமொழி.

# 4. ஒரு இரவுப்போதில் அதிதி ஈஸிசேரிலேயே வாந்தி எடுத்துவிட்டாள். ஈஸிசேரை சுத்தம் செய்வதற்காக அதன் துணியை கழட்டியது அதிதி பார்க்கவில்லை. 2 நிமிஷம் கழித்து துணி இல்லாததை பார்த்த அதிதி, "தாத்தா, ஈஸிசேர் ஒடஞ்சி போச்சி தாத்தா, நான் இனிமே எங்க படுத்துப்பேன் தாத்தா?" அழுது தீர்த்து விட்டாள். அடுத்த நாள், சுத்தம் செய்தபின் துணியை போட்டதும், அதிதி "ஹை, ஈஸிசேர் நன்னா ஆயிடுத்து" என சந்தோஷத்தில் குதித்து அதில் ஓடிப் போய் படுத்துக்கொண்டாள். "பாட்டியும், தாத்தாவும் ஈஸிசேரை நன்னா பண்ணிட்டா" அப்பிடின்னு அர்விந்த்கிட்டே சொல்லி சந்தோஷப்பட்டாள்.

rajappa
11:40am 5 Oct 2008

No comments:

Post a Comment