Tuesday, October 14, 2008

அதிதியின் மழலைகள்

அதிதியின் மழலைகள்

இதெல்லாம் 2008 செப்டம்பர் இறுதி, அக்டோபர் முதலில் நடந்தவை.

# 1. இரவு 10-15க்கு, விரித்திருந்த பாயில் சப்பணம் இட்டு அழகாக உட்கார்ந்த அதிதி, பாட்டியையும் தன் பக்கத்தில் உட்காரச் சொல்லி பாட்டு பாட ஆரம்பித்தாள். பின்னர், அர்விந்தையும், கிருத்திகாவையும் கூப்பிட்டு "ஒக்காந்துக்கோ அப்பா, ஒக்காரு அம்மா" என்று கட்டாயமாக உட்கார வைத்தாள். பிறகென்ன, அடுத்த 30 நிமிஷத்திற்கு இன்னிசை மழைதான், அழகிய மழலையில் !!

# 2. அடுத்த நாள் இரவு எங்கள் அறைக்கு வந்து, "நான் தான் தாத்தாவுக்கு காலில் எண்ணெய் தடவி விடுவேன்; பாட்டி நீ ஒக்காந்துக்கோ !" என்று பாட்டிக்கு அன்புக் கட்டளை போட்டுவிட்டு, தன் பிஞ்சுக் கையால் எனக்கு எண்ணெய் தடவி நீவி விட்டாள். இது போன்ற சேவைகளுக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

# 3. இது இன்னொரு நாள் மாலை. என்னையும், விஜயாவையும் உட்கார வைத்து, பாத்திரத்திலிருந்த புளியோதரையை கரண்டியில் எடுத்து, தன்னுடைய இடது கையால் என்னுடைய (ம்ற்றும் விஜயாவினுடைய) வலது கையை தாங்கிக்கொண்டு, என் கையில் ஒரு தாயின் அல்லது பாட்டியின் பரிவு, பாசத்தோடு புளியோதரையை கொடுத்தாள். So much kindness, so much compassion in her eyes !! நாங்கள் சாப்பிட சாப்பிட, "இன்னும் கொஞ்சம் சாப்பிடு தாத்தா," "இன்னும் கொஞ்சம் பாட்டி" என்று போட்டுக்கொண்டேயிருந்தாள். அன்று, என் வயிறு மட்டுமா நிரம்பியது என்று நினைக்கிறீர்கள் , மனஸே நிரம்பியது.

# 4. இன்னொரு மாலையில், விஜயாவின் முழங்கையில் ஒரு சின்ன காயத்தை அதிதி பார்த்து விட்டாள். அவ்வளவுதான் - "பாட்டி ! வ்ந்து என் பக்கத்திலே ஒக்காந்துக்கோ; க்ரீம் தடவி விடறேன்" "நானே ஒனக்கு மம்மம் போடறேன்"னு சொல்லி, பாட்டி கையிலே ரெண்டு கரண்டி தயிர் சாதம் போட்ட பிறகே, குழந்தை சமாதானம் ஆனாள்.

GOD Bless Aditi, our Darling

Rajappa
10:30am 14 Oct 2008

No comments:

Post a Comment