ஹாஸ்பிடலில் ஸௌம்யா
ஸௌம்யா RA Puram எங்கள் வீட்டிற்கு டிச 4ஆம் தேதி வியாழன் காலை வந்தாள். காயத்ரியும், ஸ்ரீராமும் கூட வந்தனர். வரும்போதே ஸௌம்யாவிற்கு கொஞ்சம் உடல் நலமில்லாதிருந்தது.
மறுநாள் டிச 5 ஆம் தேதி காலை முதலே அவள் ஒன்றும் சாப்பிடாமல், தண்ணீர் கொடுத்தால்கூட அதை வாந்தியெடுத்துக் கொண்டு --- அழுதுகொண்டேயிருந்தாள். மாலை 5 மணிக்கு அவளை காயத்ரியும் விஜயாவும் டாக்டரிடம் கூட்டிச் சென்றார்கள். டாக்டர் இல்லாததால், தங்கள் வழக்கமான டாக்டருக்கு போன் பேசி அவரது ஆலோசனையின் பேரில், குழந்தையை, மந்தைவெளி தேவநாதன் வீதியிலுள்ள "ஸ்ரீரங்கா ஹாஸ்பிடலில்" அட்மிட் செய்துவிட்டு, எனக்குப் போன் பண்ணினார்கள்.
ஆபிஸிலிருந்து அருண் வந்ததும், அவனும், நானும், ஸ்ரீராமை தூக்கிக்கொண்டு ஹாஸ்பிடலுக்குப் போனோம். ஸௌம்யாவிற்கு IV Fluid (drips) ஏற்றிக்கொண்டிருந்தார்கள். கிழித்துப்போட்ட நாராக குழந்தை படுத்திருந்ததைப் பார்த்து மனசு உடைந்து போயிற்று.
இந்த போட்டோ டிச 3 ஆம் தேதி எடுத்தது
பிறகு, நான், விஜயா, காயத்ரி, ஸ்ரீராம் ஆகியோர் வீட்டிற்கு வந்து, அருணுக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொண்டு நானும், விஜயாவும் மீண்டும் இரவு 10 மணிக்கு ஹாஸ்பிடல் சென்றோம். ஸௌம்யா அப்போது கொஞ்சம் தேறியிருந்தாள்.
இரவு 10-30க்கு அர்விந்த் (டில்லி சென்றிருந்தான்) அங்கு வந்தான்; அவனுடன் நாங்கள் வீடு திரும்பினோம்; அருண் இரவு அங்கேயே தங்கினான்.
மறுநாள் (டிச 6) காலை ஏழு மணிக்கு காபி எடுத்துக்கொண்டு நான் ஹாஸ்பிடல் சென்றேன். ஸௌம்யா தேறியிருந்தாள். மீண்டும் 10 மணிக்கு நானும் காயத்ரியும் ஹாஸ்பிடலுக்குச் சென்றோம் (அருணுக்கு டிபன்). ஸ்ரீராமை விஜயாவும் கிருத்திகாவும் பார்த்துக்கொண்டார்கள்.
காலையிலேயே டிஸ்சார்ஜ் பண்ணுவதாகச் சொல்லியிருந்த Dr Madhavan, Paediatrist, ஸௌம்யாவை டிஸ்சார்ஜ் செய்தபோது பகல் 1-45 ஆகிவிட்டது. வீட்டிற்கு வந்து சாப்பிட்டோம். குழந்தை ஸௌம்யா நன்கு தேறியிருந்தாள்.
இப்படியாக, ஸௌம்யா ஆஸ்பத்திரியில் 18 மணி நேரம் இருந்தாள் (Fees = 1200.00)
rajappa
08-30am 7-12-2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment