Saturday, February 28, 2009

பெங்களூரில் ஸௌம்யா Sowmya




நேற்று (27-02-2009) காலை 5 மணி சுமாருக்கு, எங்கள் பேத்தி ஸௌம்யா பெங்களூர் வந்தாள், தன் (அம்மா வழி தாத்தா-பாட்டியுடன்). 15 தினங்கள் இங்கு அவள் இருப்பாள்.

தன் அம்மா, அப்பாவை விட்டு அவள் தனியாக இருப்பது இதுவே முதல் முறை. இரண்டே முக்கால் வயசு குழந்தை, ஏங்கிப் போய்விடுவாளோ என நான் பயப்படுகிறேன். சமத்துக் குழந்தை.


rajappa
11:45 am on 28 Feb 2009






இதன் தொடர்ச்சி - மார்ச் 12-ஆம் தேதி.

ஸௌம்யா இன்று காலை 7-30 மணி அளவில் சென்னை திரும்பினாள். அருண், காயத்ரி, ஸ்ரீராம் ஸ்டேஷன் சென்று அவளை அழைத்து சென்றனர். ஸௌம்யா 13 நாட்கள் பெங்களூரில் இருந்தாள் - தன் அப்பா, அம்மாவை விட்டு விட்டு தனியாக!

நான் பயந்து கொண்டே இருந்தேன் - எங்கேயாவது குழந்தைக்கு அப்பா-அம்மா ஞாபகம் வந்து அழப்போகிறாளே என்று; ஆனால் ஸௌம்யா சமாளித்து விட்டாள். அப்பா அருண் போனில் பேசினால், அவள் கண் கலங்கிவிடும்; சென்னைக்குத் திரும்புவதற்கு முதல்நாள், காயத்ரி ஏதோ சொல்ல, அதை தவறாக புரிந்துகொண்டு, ஸௌம்யா விக்கி விக்கி அழ ஆரம்பித்து விட்டாள். ஆனால், 5 நிமிஷங்களுக்குள் அவளை சமாதானப்படுத்தி விட்டேன்.

13 நாட்களும் சமத்தாக இருந்தாள்; வாய் ஓயாத பேச்சு - ஆயிரக்கணக்கில் கேள்விகள். அஷோக் வீட்டில் 3 நாட்கள் மட்டுமே இருந்தாள் - எங்கள் யாவருக்கும் அது ஒரு இனிய அனுபவம் -
முக்கியமாக, விஜயாவிற்கு. “பாட்டி, பாட்டி” என்று பாட்டி பின்னாலேயே சுற்றிக் கொண்டு இருந்தாள்.


God Bless Sowmya, Aditi, Sriram.

Rajappa
10:45am on 12 March 2009

Saturday, February 21, 2009

ஸ்ரீராம் “தாத்தா” சொல்கிறான் Sriram says Thatha

ஸ்ரீராம் தாத்தா சொல்கிறான். SRIRAM

ஸ்ரீராம் (07-04-2008) தற்போது “தாத்தா, தாத்தா”ன்னு நிறைய சொல்கிறான். எனக்கு மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. இரண்டு வருஷங்களுக்கு முன்பு, ஸௌம்யாவும், அதிதியும் தாத்தான்னு சொன்னபோது ஏற்பட்ட அதே சந்தோஷம் மீண்டும் இப்போது!

read this and this

ராஜப்பா Rajappa

2PM, 21 Feb

Tuesday, February 03, 2009

ஸ்ரீராமிற்கு முடி இறக்கினோம் - வைத்தீஸ்வரன் கோயில் SRIRAM


SRIRAM 01-Feb-2009 Vaitheeswaran Koil

அருணின் குழந்தை ஸ்ரீராம் (7-4-2008) தற்போது 10 மாசமாகப் போகிறது.

அவனுக்கு முடி இறக்க ஃபிப்ரவரி 1-ஆம் தேதி நாள் பார்த்து, வேன் ஏற்பாடு பண்ணி, ரூம் ஏற்பாடு பண்ணி தயாராக இருந்தோம். முதலில், ரூம் எதுவும் கிடைக்காமல் கொஞ்சம் பதட்டமாக இருந்தபோதிலும், பின்னர் இடம் கிடைத்தது. நாங்கள் 8 பேரும் + 3 குழந்தைகளும் சேர்ந்து போவதாக திட்டம்.

கடைசி நிமிஷத்தில் அஷோக்கிற்கு காலில் அடிபட்ட காரணத்தினால், அவனும் நீரஜாவும் வர முடியவில்லை. கிருத்திகா-அர்விந்த் ஆகியோராலும் வர இயலவில்லை. எனவே, நான், விஜயா, அருண், காயத்ரி, ஸௌம்யா, ஸ்ரீராம் ஆகிய 6 பேர் மட்டுமே கிளம்பினோம். அருண் தன் காரில், டிரைவர் (ரூ. 500/- ஒரு நாளைக்கு) ஏற்பாடு பண்ணிக்கொண்டு கிளம்பினோம்.
சனிக்கிழமை 31-01-2009 காலை 11-15க்கு சென்னையில் எங்கள் வீட்டிலிருந்து கிளம்பி, மரக்காணத்தில் 1/2 மணி நேரம் தங்கிவிட்டு, பின்னர் கடலூர் சென்றோம். அங்கு லேசாக டிஃபன் சாப்பிட்டுவிட்டு, குமார் வீட்டிற்கு (பாபுராவ் தெருவில்) சென்றோம். சுமார் 15 - 20 வருஷங்களுக்குப் பிறகு பாபுராவ் தெருவிற்குச் செல்கிறோம். மாற்றமும் அதிகமில்லை, முன்னேற்றமும் இல்லை.



பிடாரி அம்மன், ப்ரஹந்நாயகி அம்மன், ஸ்ரீபாடலீஸ்வரர் கோயில்களுக்கு சென்று அம்மன், ஸ்வாமியை தரிசித்தோம். மாலை 6-15க்கு கிளம்பி, வைத்தீஸ்வரன் கோயிலுக்கு விஸ்வா லாட்ஜுக்கு சென்றடையும்போது, இரவு 8-15. ஒரு ரூமிலேயே 6 பேரும் இருக்கவேண்டிய கட்டாயம். சாப்பிட்டுவிட்டு, ரூமில் படுத்துத் தூங்கினோம். இந்த லாட்ஜ் குளத்திற்கு மிகமிக அருகில் உள்ளது.








01-Feb-2009 காலையில் ரமணா (காயத்ரியின் தம்பி) பெங்களூரிலிருந்து வந்தான். குழந்தைக்கு காலை 8 மணிக்கு முடியிறக்கினோம் (மாமா மடியில் உட்கார வைத்து). கொஞ்சம் அழுதான். ரூமிற்கு வந்து, குளித்துவிட்டு, ஸ்ரீராமிற்கும், ஸௌம்யாவிற்கும் புது டிரெஸ் போட்டு (விஜயாவும், காயத்ரியும் 9-கஜம் புடவையில்) கோயிலுக்குச் சென்றோம்.














கோயிலில் எக்கச்சக்கமான கூட்டம் - 35 கல்யாணம், 55 காது குத்து விழா கோயிலில் நடந்துகொண்டிருந்தன. ஊரிலும் ஒரே கல்யாணக் கும்பல்தான்; எங்களுக்கு காலை டிஃபனே கிடைக்கவில்லை. விஜயாவும் காயத்ரியும் மாவிளக்கு போட்டனர். 5 ஸ்வாமி/அம்மனுக்கு அர்ச்சனை பண்ணியபிறகு ரூம் திரும்பினோம். என்ன கூட்டம் ! குளத்தில் நீர் நிரம்பியிருந்தது; கொஞ்சம் சுத்தமாகவே காணப்பட்டது. ஸௌம்யா படிக்கட்டில் உட்கார்ந்து தண்ணீரை பார்த்துக் கொண்டேயிருந்தாள்; வரவே அவளுக்கு மனசில்லை





சதாபிஷேகம் என்னும் ஹோட்டலில் சாப்பிட்டோம். 2-15 மணிக்கு வைத்தீஸ்வரன் கோயிலை (ஊரை) விட்டு புறப்பட்டு, கடலூரில் ஜூஸ் குடித்தபின், நேராக சென்னையில் வந்து இறங்கும்போது இரவு மணி 8. ஸ்ரீராமிற்கு ஆரத்தி எடுத்து, வீட்டினுள் நுழைந்தோம்.


கிருத்திகா சமைத்து வைத்திருந்தாள். சாப்பிட்ட பின்னர் அருண் ஆகியோர் திருவான்மியூர் போனார்கள்.இவ்வாறாக, ஸ்ரீராம் முடி இறக்குதல் இனிதே நடைபெற்றது.

குழந்தையின் ஆயுஷ்ய ஹோமம் பங்குனி 15, (மார்ச் 28) சனிக்கிழமை அடையாறு NKS Hallல் நடைபெற உள்ளது. எல்லாரும் வந்திருந்து குழந்தையை ஆசீர்வதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


ராஜப்பா
மாலை 4-10 மணி, 03-02-2009

IMPORTANT PHONE NUMBERS

DURAI GURUKKAL : 04364 - 279220,  94435 64347
THAILA LODGE : 99448 86682 (Mr ANAND)
BALAMBIKA LODGE: 94435 64604 (Mr RAMESH)
VISWA LODGE : 94444 32665