Saturday, April 04, 2009

ஸ்ரீராம் ஆயுஷ்ஹோமம் Sriram Ayush homam

SRIRAM AYUSHYA HOMAM




அருணின் குழந்தை ஸ்ரீராம் 7-4-2008 அன்று பிறந்தான்; குழந்தையின் ஆயுஷ்ஹோமம் நக்ஷத்திரம் (அஸ்வினி) இந்த வருஷம் மார்ச் மாசம் 28 ஆம் தேதி சனிக்கிழமை அன்று வந்தது.

3 மாசங்களுக்கு முன்பே அருண் ஹால் ஏற்பாடு பண்ணி முன்பணமும் செலுத்தி விட்டான். இடையில், ஃபிப்ரவரி 4-ஆம் தேதி நானும் விஜயாவும் திடீரென பெங்களூர் போய் அங்கு 45 நாட்கள் தங்கவேண்டி வந்தது. பத்திரிகை அடிப்பது, அட்ரஸ் எழுதி எல்லாருக்கும் அனுப்புவது, catererக்கு ஏற்பாடு பண்ணுவது, மெனு தீர்மானிப்பது, போன்ற வேலைகளை அருண்-காயத்ரியே செய்து விட்டனர். Caterer எங்கள் குடும்ப/ஆஸ்தான caterer ஐயப்பன் தான்!

மார்ச் 21-ஆம் தேதி நாங்கள் சென்னை திரும்பியதும், ஒரு நல்ல நாளில் வைதீகத்திற்குத் தேவையான் சாமான்களை வாங்க ஆரம்பித்தோம். இன்னொரு நாள் நானும், அருணும் சென்று வைதீக சாமான்களை வாங்கி முடித்தோம். எல்லா சாமான்களும் மயிலாப்பூர் தெற்கு மற்றும் வடக்கு மாட வீதிகளில் வாங்கினோம்.

மார்ச் 22 ஆம் தேதி நான், விஜயா, சதீஷ், அர்விந்த், கிருத்திகா, அதிதி ஆகியோர் திநகர் GRT சென்று, குழநதை ஸ்ரீராமிற்கு (அர்விந்த், அஷோக்) சித்தப்பாக்கள் ஆசிர்வாதமாக 4 கிராமில் (கிராம் விலை ரூ 1435.00) ஒரு பொன்காசு வாங்கினோம்.

மார்ச் 27 வெள்ளிக்கிழமை பகல் 12 மணி அளவில் 75 தேங்காய்கள் வந்து இறங்கின. நானும், விஜயாவும் அவற்றை தாம்பூலப் பைகளில் வெற்றிலை பாக்குடன் சேர்த்து போட்டோம். 70 பைகள் போட ஒண்ணரை மணி நேரம் பிடித்தது.

அன்று மாலை 7 மணிக்கு வடபழனி கோயிலில் தங்கத் தேர் இழுத்தோம்; காயத்ரியின் அப்பா ஏற்பாடு பண்ணியிருந்தார். (விவரம் இங்கே). வடபழனியிலேயே புஷ்பம், பழம், வாழையிலை ஆகியவைகளை வாங்கினோம். நானும், விஜயாவும் அன்றிரவு அருண் வீட்டிலேயே தங்கிவிட்டோம்.

மறுநாள், சனிக்கிழமை, மார்ச் 28, ஆயுஷ்ஹோம முஹூர்த்த நாளன்று காலை 5-15க்கு எழுந்து, குளித்துவிட்டு, ஸ்ரீராமை எழுப்பி அவனுக்கு ஆரத்தி எடுத்து, மங்கள ஸ்நானம் செய்வித்தோம். காயத்ரி ஹவிஸுக்கு கொஞ்சம் சாதம் பண்ணினாள். எல்லாரும் ரெடியான பிறகு, அருண் காரில் NKS Hallக்கு 7-15க்கு போனோம்.


உறவினர்கள் வர ஆரம்பித்தனர். அஷோக், நீரஜா இன்று விடியற்காலை 5 மணிக்கு பெங்களூரிலிருந்து வந்து சேர்ந்தனர். அவர்களும், அர்விந்த், சதீஷ், அதிதி ஆகியோரும் 8மணி சுமாருக்கு எல்லா சாமான்களையும் எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தனர்; கிருத்திகா 9.00 க்கு வந்தாள்.



40 பேருக்கு டிஃபன் (கேஸரி, இட்லி, பொங்கல், வடை - ரூ 60.00) சொல்லியிருந்தோம். சுமார் 55-60 பேர் டிஃபன் சாப்பிட்டோம். சாஸ்திரிகள் 9-45 க்கு வந்தனர். 10.31 க்கு நவக்கிரஹ ஹோமம் ஆரம்பமாயிற்று.
பின்னர் காது குத்தல். ஸ்ரீராம் தன் மாமா ரமணா மடியில் உட்கார்ந்து, காது குத்திக் கொண்டான். அழுதான்.


அடுத்து, ஆயுஷ்ஹோமம் நடந்தது. ஆசீர்வாதங்களுக்குப் பிறகு சுமார் 12-15 க்கு ஆயுஷ் ஹோம விழா நிறைவு பெற்றது. 95 - 100 பேர் வந்திருந்தனர். எல்லாரும் சாப்பிட்ட பிறகு கடைசியில் நாங்கள் 8 பேர் சாப்பிட்டோம்.

மதியம் 2.30 க்கு ஹாலை காலி பண்ணி, கடைசியாக நானும் காயத்ரியும் ஸ்ரீராமும் வீட்டிற்கு கிளம்பினோம்.

இவ்வாறாக, குழந்தை ஸ்ரீராமின் ஆயுஷ்ஹோமம் மிகச் சிறப்பான முறையில் நடைப்ற்று முடிந்தது; ஸ்ரீ கற்பகாம்பாள் ஸமேத ஸ்ரீ கபாலீஸ்வரருக்கு நமஸ்காரங்கள்.

ராஜப்பா
12:30 மணி, 4 ஏப்ரல் 2009

No comments:

Post a Comment