Tuesday, June 23, 2009

அதிதியின் 3-வது பிறந்த நாள் - ADITI BIRTHDAY

அதிதியின் 3-வது பிறந்த நாள்
புதன்கிழமை, ஜூன் 17, 2009

இன்று அதிதியின் 3-வது பிறந்த நாள். காலையில் அவளது ஸ்கூலில் அதிதி கேக் வெட்டி மற்ற குழந்தைகளுடன் தன் பிறந்த நாளை கொண்டாடினாள்.

மாலை குழந்தைக்கு புத்தாடை போட்டு, மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு அர்விந்த், கிருத்திகா, அதிதி, நான், விஜயா, சதீஷ், வாசு, ராஜி, ஸ்ருதி, சுஜனி, மற்றும் TSG, மாமி ஆகியோர் சென்றோம்.

மாலை 7 மணிக்கு, ஸ்ரீ கற்பகாம்பாள் தாயாருக்கு தங்கப் பாவாடை அணிவித்தனர். இதற்கான ஏற்பாட்டை (ரூ. 750.00 கட்டவேண்டும்) அர்விந்த்-கிருத்திகா செய்திருந்தனர். ஜொலிக்கும் தங்கப் பாவாடையில் அம்மனை தரிஸிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். மிகப் பரவசமாக இருந்தது. இன்று ஒரு வார நாள் என்பதால், பிறந்த நாள் விழா மற்றும் விருந்தை ஜூன் 21ஆம் தேதி ஞாயிறன்று கொண்டாடினோம்.
ஞாயிறு, ஜூன் 21, 2009.

எழுந்தது முதலே நாங்கள் யாவரும் வேலையில் மூழ்கிவிட்டோம். காலையில் ஷாமியானா போடப்பட்டு, மதியம் 25 நாற்காலிகள், சாப்பாட்டு மேஜைகள், மின்விளக்குகள் வந்து சேர்ந்தன. விழா நடக்கும் மொட்டைமாடி அலங்கரிக்கப்பட்டது. ஹோட்டல் அம்பாஸடர் பல்லவாவிலிருந்து கேக்கையும், Spencers கடையிலிருந்து ஐஸ்கிரீம் கப்புகளையும் அர்விந்த் வாங்கிவந்தான். 5-45 மணிக்கு முதல் விருந்தாளி வந்தார். பிறகு நிறைய பேர் வர ஆரம்பித்தன்ர்.

புது ட்ரெஸ்ஸில் இருந்த அதிதி 6-45 மணிக்கு கேக் வெட்டினாள்.




பின்னர் விருந்து ஆரம்பம். Caterer ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குலாப் ஜாமூன், தயிர்வடை, பூரி, உ.கிழங்கு கறி, புலவ், காய்கறி குருமா, பச்சடி, தயிர் சாதம், சிப்ஸ், ஊறுகாய், ஐஸ்கிரீம், பீடா - இதுதான் மெனு. சாப்பாடு நன்றாக இருந்தது.

அதிதியின் class-mates நிறைய குழந்தைகள் வந்திருந்தனர். விழா கோலாகலமாக இருந்தது. யாவருக்கும் அதிதி return gifts கொடுத்தாள். சுமார் 9 மணிக்கு விழா இனிதே முடிவு பெற்றது - இது ஒரு இனிய மாலைப்பொழுது.


நாங்கள் 11 பேர், TSG மாமா, மாமி, வாசு, ராஜி, ஸ்ருதி, சுஜனி, சதீஷ், சுகவனம், சுதா, சந்தர், தனுஷ், விஜயராகவன், மாமி, சுபா, மகேஷ், அர்விந்தின் colleagues, ஆகியோர் கலந்து கொண்டனர்.

ராஜப்பா
23-06-2009 காலை 1000

No comments:

Post a Comment