அதிதியைப் பற்றி எழுதி கிட்டத்தட்ட ஆறு மாஸங்கள் ஓடிவிட்டன. இந்த இடைவெளியில் குழந்தையின் பேச்சும், ஆட்டமும், ஓட்டமும், டான்ஸும், பாட்டும் பன்மடங்கு பல நூறு மடங்கு வளர்ந்துள்ளது - எழுதி விளக்க முடியாது.
தினமும் இரவு 9-30 மணியானால், சாப்பாடு முடிந்ததும், “தாத்தா, நம்பளோட ரூமுக்குப் போலாம் தாத்தா,” என சொல்லி, ரூமிற்குள் நுழைந்ததும் “ஏஸி போடு தாத்தா,” என ஏஸி போடவைத்து, அடுத்த 1 1/2 மணி காலத்திற்கு ஒரே பாட்டும், டான்ஸும்தான்; அவளுக்கு ஸமமாக தன்னுடைய பாட்டியும் ஆட வேண்டும், எக்ஸர்சைஸ் பண்ண வேண்டும். இந்த 90 நிமிஷங்கள் எங்கள் தினத்தின் பொன்னான தருணங்கள் ...
நேற்றிரவு (30-05-2009) நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, ஒரு notepad ஐயும், பேனாவையும் வைத்துக்கொண்டு, “பாட்டி, நாந்தான் டாக்டர், நீ பேஷண்ட்; உனக்கு என்ன உவ்வா?” என்று கேட்டு, “ஒம் பேரு என்ன, வயசு என்ன?” கேட்டு பேப்பரில் எழுதி, மருந்துகளை எழுதி, “ரெண்டு நாளைக்கு சாப்பிடு, மம்மம் சாப்பிட்ட பிறகு மருந்து சாப்பிடு,” சொல்லி, “ரெண்டு நாளைக்கு அப்றம் பாக்கறேன், bye" சொல்லி முடித்தாள். பின்னர், நான் patient. எனக்கும் மருந்து எழுதிக் கொடுத்தாள் - ஒரு சிறிய மாற்றம், நான், மம்மம் சாப்பிடுவதற்கு முன்னாலே, மருந்து சாப்பிடணும்! டாக்டர் அதிதி!!
God Bless Aditi
rajappa
11:15am on 01-06-2009
No comments:
Post a Comment