Friday, May 20, 2011

Q - A session with my grand-daughter Aditi

நேற்றிரவு (19-05-2011) அதிதி என்னிடம் வந்து, “தாத்தா, ஒன்னோட சின்ன வயசு ஃபோட்டோ இருக்கா?” எனக் கேட்டாள். அந்த காலத்தில் காமிராவே கிடையாது என பதில் சொன்னேன்.


“ஏன் தாத்தா, ஃபோனிலேயே காமிரா இருக்குமே !?” - இது அவளது கேள்வி # 2. அந்த காலத்தில் பேசுவதற்கே ஃபோன் கிடையாது, என சிரித்தபடியே நான் சொன்னேன்.

“பேசமுடியாட்டா என்ன, மெஸேஜ் குடுக்கலாமே தாத்தா !?” இது கே # 3. ஏதோ சொல்லி மெஸேஜ் குடுக்க முடியாது என சமாளித்தேன்.

”ஒண்ணுமே இல்லாட்டா என்ன, கம்ப்யூட்டரில் ஈ-மெயில் அனுப்பலாமே?”  இது கேள்வி # 4.

நானும், விஜயாவும் சிரித்து விட்டோம்.

20 வருஷங்களுக்கு முன்பு இருந்த நிலமையை, குழந்தை அதிதி போன்றவர்களுக்கு எப்படி விளக்குவது?

ராஜப்பா
08:40 காலை
20-05-2011

முக்கிய பின் குறிப்பு:  அதிதி சென்ற 10 தினங்களாக நீச்சல் கற்றுக் கொள்கிறாள்; இதுநாள் வரை, ட்யூப் கட்டிக் கொண்டு நீச்சல் பழகிய அவள் நேற்று ட்யூப் இல்லாமலேயே நிறைய நீச்சல் அடித்தாள் !!

1 comment:

  1. hi..i was searching some random stuffs and somehow entered to ur blog..quite good.. and especially this questionnare was amazing!! hope u are enjoying with ur grand daughters!! keep up the work! Have fun!

    ReplyDelete