மிஸ்ஸியம்மா - 56 வருஷங்களுக்கு முன்பு 1955-ஆம் ஆண்டில் எல் வி பிரசாத் டைரக்ஷனில் வெளிவந்த தமிழ்ப் படம் (ஒரிஜினலில் தெலுங்கு மிஸ்ஸம்மா). ஜெமினி கணேசன், சாவித்திரி, ஜமுனா, எஸ் வி ரங்காராவ், தங்கவேலு, சாரங்கபாணி நடித்தது.
ராஜேஸ்வர ராவ் இசை. மிக இனிமையான, இன்றும் காதுகளில் தேன் வந்து பாயும் “பிருந்தாவனமும் நந்தகுமாரனும்” “வாராயோ வெண்ணிலாவே” போன்ற தெவிட்டாத அமுத ஊற்றுக்கள். இன்னும் பல பாடல்கள்.
நேற்று (13-12-2011) மதியம் KTV-யில் மீண்டும் முழுதுமாக பார்த்தேன்(தோம்) - பகல் தூக்கத்தையும் துறந்து!
பாடல் வந்து 56 வருஷங்கள் ஆயினும், அதிதி கூட “பிருந்தாவனத்தை” பாடுகிறாள்; நடனம் ஆடுகிறாள். இதுதான் இசை.
ராஜப்பா
09:45 AM
14 Dec 2011
Wednesday, December 14, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment