Monday, October 29, 2007

ஸௌம்யா, அதிதி பேசுகிறார்கள் Aditi Sowmya

என்னுடைய இரண்டு பேத்திகளும் - ஸௌம்யா, அதிதி இருவரும் - பேச ஆரம்பித்து விட்டனர்.

ஸௌம்யா நன்றாகவே பேசுகிறாள் - இரண்டு, இரண்டு வார்த்தைகளாக கூட - அர்விந்த் கார், மீனா சித்தி என - பேச ஆரம்பித்து விட்டாள். வார்த்தை தெரியா விட்டால், தலையை ஆட்டி புரிய வைத்து விடுகிறாள். Aditi Sowmya

அதிதிக்கு இந்த அளவு பேச்சு வராவிட்டாலும் அவளும் நெறய வார்ததைகள் சொல்கிறாள். எல்லாவற்றையும் புரிந்து கொண்டு பேசாமலேயே செய்து முடித்து விடுகிறாள் - இல்லையென்றால், இருக்கவே இருக்கிறது அவள் கையும், கண்களும், சைகைகளும்.

யாழ் இனிது குழல் இனிது என்ப மக்கள்தம் மழலைச் சொல் கேளாதவர் - என்ன ஒரு உண்மை. Aditi, Sowmya

ராஜப்பா
10:50 AM 29-10-2007
Aditi, Sowmya

Wednesday, October 24, 2007

தாத்தா - தாத்தா Aditi Sowmya

2007, ஜுன் மாசத்தில் எழுதினேன் - On Becoming a Thatha - என்று. அப்போது, பேத்திகள் ஸௌம்யா, அதிதி இருவரும், "தாத்தா எங்கே?" என்று கேட்டால், தங்கள் பிஞ்சு தளிர் விரல் நீட்டி என்னைக் காண்பிப்பார்கள் - என் மனசை அள்ளிக் கொண்டுப் போய்விடுவார்கள்.

சென்ற இரண்டு மாசங்களாக இருவருமே , அழகான தேன்மழலையில் "தாத்தா, தாத்தா" என ஓயாமல் என்னைக் கூப்பிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இன்பத்தேன் வந்து பாயுது என் காதினிலே. பிள்ளைக் கனியமுது, பேசும் பொற்சித்திரம் இரண்டு பேரும் சொல்லு மழலையிலே என் உள்ளம் குளிருது. (மஹாகவிக்கு என் நன்றிகள்).

தாத்தா ஆனவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். Aditi, Sowmya, Thatha

ராஜப்பா தாத்தா

அக்டோபர் 24, 2007

மாலை 7 மணி




Monday, October 01, 2007

ஸௌம்யாவிற்கு முடி இறக்குதல் 2-ம் தடவையாக Sowmya

குழந்தை ஸௌம்யாவிற்கு இரண்டாவது முறையாக 2007, செப்டம்பர் 24-ஆம் தேதியன்று, அரியலூரில் கலியபெருமாள் கோயிலில் முடியிறக்கப்பட்டது. (முதல் தடவை முடியிறக்கியது பற்றி இங்கே படிக்கவும்)

அருண், காயத்ரி, அவளது அம்மா-அப்பா சென்றனர். முதல் நாளே திருச்சி / துறையூர் சென்று, அங்கிருந்து அரியலூர் சென்றனர். திரும்பும் போது, கும்பகோணம் வழியாக வந்தனர்.

அப்பொழுது எடுத்த SOWMYA சில போட்டோக்கள் இதோ:

Before Mottai

After Mottai
After




ராஜப்பா
11.00, Oct 1, 2007