Saturday, May 09, 2009

ஸௌம்யாவிற்கு அக்ஷராப்பியாஸம் - Aksharabyasam to Sowmya

யாகுந்தேந்து துஷாரஹார தவளா யா ஸுப்ர வஸ்த்ராவ்ருதா
யா வீணா வரதண்ட மண்டிதகரா யா ஸ்வேத பத்மாஸநா
யா ப்ரஹ்மாச்யுத ஸங்கரப்ரப்ருதிர் தேவைஸ்ஸதா பூஜிதா
ஸா மாம் பாது ஸரஸ்வதீ பகவதீ நிஸ்ஸேஷ ஜாட்யாபஹா.

எங்கள் ஸௌம்யாவிற்கு இப்போது 3 வயசாகப் போகிறது (17-5-2006 அன்று பிறந்தாள்). அவளுக்கு சென்ற வியாழன் 7 மே அன்று அக்ஷராப்பியாஸம் செய்து வைத்தோம்.

வேண்டிய சாமான்களையும், புஷ்பம், அரிச்சுவடி போன்றவைகளையும் மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் வாங்கினோம். மற்ற சாமான்களை அருண் திருவான்மியூரில் வாங்கினான்.
7 ஆம் தேதி காலை 7-15க்கே விஜயாவும் நானும் அருண் வீட்டிற்கு சென்று விட்டோம். காயத்ரியின் அப்பா-அம்மா அங்கே ஏற்கனவே இருந்தனர். கோபால மாமா பூஜை பண்ணுவதாக இருந்தார். கடைசி நேரத்தில் அவருக்கு உடம்பு சரியாக இல்லாததால், கிட்டா மாமா (கிருஷ்ணன்) தான் வந்து மந்திரம் சொல்லி பூஜை பண்ணினார்.
காலை 8-45 க்கு ஆரம்பித்த பூஜை 10-15க்கு முடிவுற்றது. ஸரஸ்வதீ தேவிக்கு அருணும், ஸௌம்யாவும் நிறைய பூ போட்டு அர்ச்சித்து பூஜை செய்தனர். ஸௌம்யாவின் நாக்கில் தேன் தடவப் பெற்றது. (ஸ்ரீராமிற்கும்தான் !) முதலில் நெல்லிலும், பின்னர் ஸ்லேட்டிலும் தமிழ் எழுத்துக்களை ஸௌம்யா எழுதினாள்.

பூஜை முடிந்ததும் அப்பளம், வடை, பாயஸத்துடன் விருந்து. காயத்ரியின் அம்மா பண்ணினார்.
அருண், காயத்ரி, குழந்தைகள், விஜயா, நான், காயத்ரியின் அம்மா, அப்பா, கிட்டா மாமா, சாரதா, ஸ்வாதி, விஜயராகவன், சாரதா மாமி (சந்தரின் பெற்றோர்), கிருத்திகா, அதிதி ஆகியோர் சாப்பிட்டோம். (அர்விந்த் அன்று பெங்களூர் போயிருந்தான்)

இவ்வாறாக, குழந்தை ஸௌம்யாவின் அக்ஷராப்பியாஸம் நல்ல முறையில் நடந்தது. குழந்தைக்கு ஸரஸ்வதியின் பரிபூரண அருள் கிடைக்கட்டும்.

ஸ்ரீ ஸரஸ்வதீ தேவ்யை நம:



ராஜப்பா
12:30 09-05-2009

No comments:

Post a Comment