Saturday, November 20, 2010

Aditi's Gita Slokams

Aditi now knows 11 slokas from Gita, Chap 10, slokas 1-11. And she won a prize for chanting these slokas. The photo below



rajappa
19-11-2010
1.00PM







Friday, October 22, 2010

அதிதியின் கீதை ஸ்லோகங்கள்

நேற்று முதல் அதிதி இன்னும் இரண்டு கீதை ஸ்லோகங்களை சொல்கிறாள். முன்பு அவள் மூன்று ஸ்லோகங்கள் சொல்வதை ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி எழுதியிருந்தேன் (படிக்க).

அத் 10 --  ஸ்லோகம் 4 மற்றும் 5 தற்போது சொல்கிறாள். மொத்தம் ஐந்து ஸ்லோகங்கள்.

கீதாசாரியனின் அருள் குழந்தைக்கு கிட்டட்டும்.


ராஜப்பா
22-10-2010
10:40


x

Monday, October 18, 2010

Sriram Starts Going to School

ஸ்ரீராம் (அருண்) நேற்று (17-10-2010) விஜயதஸமி முதல் ஸ்கூலிற்கு செல்ல ஆரம்பித்துள்ளான். அருண்-காயத்ரி அவனை ஸௌம்யா படிக்கும் அதே ஸ்கூலில் (LEARNING TREE, Shastri Nagar, Adyar) சேர்த்துள்ளார்கள்.


நேற்று அவன் 1/2 மணி நேரம் ஸ்கூலில் இருந்தான். இன்று முதல் அவனும் ஸௌம்யாவுடன் சேர்ந்து ஸ்கூலிற்குப் போவான்.




ஸ்ரீராமின் இன்றைய  வயது 2 வருஷம் 6 மாதம் (7-4-2008).


Learning Tree School website here

ராஜப்பா
காலை 10:00 மணி
18-10-2010

Thursday, August 05, 2010

அதிதியின் கீதை ஸ்லோகங்கள்

போன வாரத்தில் ஒரு நாள் - ஸ்கூலிலிருந்து (ஹரிஸ்ரீ வித்யாலயா)   திரும்பிய அதிதி, “தாத்தா, ஒனக்கு ஒண்ணு சொல்றேன் கேளு” என்று ஆரம்பித்து, குற்றால அருவி சாரலாக, பொங்கிப் பெருகி வரும் காவிரியாக, மடமடவென்று எதையோ சொல்லி முடித்தாள்.

அவள் முகத்தில் வழக்கம்போல பெருமிதமும், குறும்பும் கொப்பளித்தன.  எனக்குத்தான் ஒன்றும் புரியவில்லை. “காத்தால நீ படிப்பியே, அந்த கீதை, தாத்தா” என்று விளக்கம் கொடுத்தாள். கீதை புஸ்தகத்தை எடுத்து INDEX ஐ புரட்டினாலும் அவள் என்ன சொல்கிறாள் என்பது புரியவில்லை.

 “ஸூர்ய ஏவ மஹாபாஹோ ..” என்பது ஆரம்பம் எனப் புரிந்தாலும், “ஸூர்ய” என்று ஆரம்பிக்கும் ஸ்லோகம் கீதையில் இல்லை.  எத்தனை முறை கேட்டாலும் அதிதி ஸூர்ய ஏவ என்றே ஆரம்பித்தாள்.

மறுநாள்தான் குழப்பம் நீங்கியது - அர்விந்த் ஸ்கூலிலிருந்து வந்ததும் “கீதையின் 10வது அத்தியாயம், முதல் 10 ஸ்லோகங்கள் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள்” என சொன்னான்.

                भुय एव महाबाहो श्रूणु मे परमम वच: ।

           यत्त ते अहम प्री-यमाणाय वच्-स्यामि हित-काम्यया ॥

இது அத்தியாயம் 10 -- ஸ்லோகம் 1.

பூய ஏவ என்பதை ஸூர்ய ஏவ என மழலையில் மாற்றிவிட்டாள். இதுவரை முதல் 3 ஸ்லோகங்கள் சொல்லி கொடுத்திருக்கிறார்கள். அதிதி தினமும் காலையில் என் பக்கத்தில் உட்கார்ந்து, “ஸூர்ய ஏவ” ஆரம்பித்து 3 ஸ்லோகங்களையும் மழலையில் சொல்லுவாள்.

கீதை அருளிய கிருஷ்ண பகவானே அந்த மழலையில் மனசை பறிகொடுத்து விடுவான் - பூய ஏவ == ஸூர்ய ஏவ என மாற்றப்பட்டால் என்ன !?

ராஜப்பா
05-08-2010
காலை 11.00 மணி


Wednesday, August 04, 2010

அதிதியும் சிண்ட்ரெல்லாவும்

இன்று (4 ஆகஸ்ட்) காலை அதிதிக்கு நான் சிண்ட்ரெல்லா கதை சொல்லிக் கொண்டிருந்தேன்.

“அழுக்காய், கிழிந்த உடைகளுடன் அழுது கொண்டிருந்த சிண்ட்ரெல்லா முன்பு ஒரு தேவதை தோன்றினாள்; ’அழாதே, நான் உன்னை ஒரு அழகிய குட்டி தேவதையாக மாற்றுகிறேன்’ எனச் சொல்லி, குழந்தை சிண்ட்ரெல்லாவிற்கு வாசனை திரவியங்கள் போட்டு குளிப்பாட்டி, புத்தம் புது உடைகள் அணிவித்து, அலங்காரம் பண்ணி, காலுக்கு பளபளக்கும் கண்ணாடி ஷு போட்டவுடன், சிண்ட்ரெல்லா அழகிய ஒரு குட்டி தேவதையாக காட்சி அளித்தாள்,” எனச் சொன்னேன்.

அப்போது, அதிதி குளித்திருக்கவில்லை. அவள் உடனே தன் பாட்டியை (விஜயா) கூப்பிட்டு, “பாட்டி, எனக்குக் குளிப்பாட்டி, என்னையும் ‘குட்டி தேவதையாக ஆக்கு“ எனச் சொல்லி, குளித்தாள்; புது ட்ரெஸ் போட்டுக்கொண்டாள். அலங்காரம் பண்ணிக்கொண்டாள். லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டாள். செண்ட் பூசிக் கொண்டாள். முதல் நாள் வாங்கியிருந்த புது ஷூவை போட்டுக் கொண்டாள். விஜயாவும் தான் அணிந்திருந்த இரண்டு செயின்களைக் கழட்டி, பேத்திக்கு போட்டு விட்டாள்.

15 நிமிஷத்தில் என்னிடம் வந்து, “தாத்தா .... என்னைப் பாரு; நானும் தேவதை போல இருக்கேன் இல்ல” என மலர்ந்த முகம் முழுதும் புன்னகையுடன் தோன்றினாள் - முகத்தில்தான் என்ன பெருமை!







குழந்தையைக் உச்சி மோர்ந்து முத்தமிட்டேன் என்பதை சொல்லவும் வேண்டுமோ?

ராஜப்பா
04-08-2010
காலை 11 மணி

Saturday, July 31, 2010

Grand Parents' Day

Yesterday (Friday, 30 July 2010) the Grandparents' Day was celebrated by Sowmya's school (LEARNING TREE) at the Sastrinagar Welfare Assn Community Hall, 5th Cross street.

We two reached the venue by 0900 itself, and Sowmya came at 0920. The function started by 0930 and there was a good crowd of thathas and paatties, all in their best clothes and proud smile on their faces! After all, it was their Pethis and Perans, and the happiness naturally  reflected on their faces.
There were a few games for the Ts-and-Ps. Everyone participated enthusiastically. Six thathas were draped in grandmothers' saris by eager kids and six paatties in thathas' veshtis. Full of fun. Vijaya took part in this. Songs and fun continued. Vijaya participated in this also, singing Kannan Engal Kannanam, Karmegha Vannanam.

The children were apparaently very fond of their Ts-and-Ps and thery beamed with joy and happiness. "My thatha, My paatti" was proudly written on their little faces ....

After refreshments to both the kids and their Ts-and-Ps, the function wound up at 11-45. A memorable morning, well-thought out by the school management.

rajappa
11:10 AM
31 July 2010

Thursday, July 29, 2010

குழந்தையின் உள்ளம்

என் நாலு வயசு பேத்தி அதிதிக்குக் கதை சொல்லிக் கொண்டிருந்தேன் - மஹாபாரதத்தில் த்ரௌபதியை துகிலுரியும் கதை.

அதிதி தன் 4-வது பிறந்த நாளன்று...

த்ரௌபதியின் புடைவையை துச்சாதனன் துகிலுரிய ஆரம்பிக்கும்போது, அவள் “கிருஷ்ணா !” என்று ஓலமிட்டு அவனை உதவிக்கு அழைக்க, பகவானும் அவளுக்கு தொடர்ச்சியாக புடைவைகளை அளித்துக் கொண்டேயிருக்க, ஒரு கட்டத்தில் துச்சாதனன் கை சளைத்து கீழே விழுந்தான் - என கதையை முடித்தேன்.

“அப்புறம், அந்த எல்லா புடவையும் அவள் மடிச்சி எடுத்திண்டு போய், தன்னோட பீரோவில வச்சிண்டுட்டாளா? FUNCTIONS- க்கு கட்டிண்டு போலாமே?!” - இது குழந்தையின் கேள்வி.

ராஜப்பா
11:10 காலை
29-07-2010

Friday, June 18, 2010

அதிதிக்கு இன்று நாலு வயசு

நேற்று (17-06-2010) வியாழக்கிழமை அதிதியின் 4-வது பிறந்த நாள். மிக விமரிசையாக வீட்டிலேயே கொண்டாடினோம்.

எனக்கு நாலு வயசு ..

அதிதி காலை 5-30 மணிக்கே எழுந்துவிட்டாள்; பிறந்த நாள் கொண்டாட்ட மகிழ்ச்சி. கிருத்திகாவும் அர்விந்தும் அவளுக்கு ஒரு “பெரிய” சைக்கிள் வாங்கியிருந்தனர். காலையில் திடீரென புத்தம்புது சைக்கிளைப் பார்த்ததும் அதிதியின் முகத்தில் ஒரே சந்தோஷம். உடனே சைக்கிளை ஓட்ட ஆரம்பித்துவிட்டாள்.

அதிதி தன் புது சைக்கிளில்

பிற்பகல் அர்விந்தும் கிருத்திகாவும் வீட்டை அலங்கரித்தனர். மாலை 5-15 க்கு முதல் விருந்தினர் நுழைந்தனர். எல்லாருமே அதிதியின் பள்ளிக்கூட நண்பர்கள். 4-வயசு மழலையர் பட்டாளம் !! அவர்கள் அம்மாக்களும் வந்திருந்தனர்.

அதிதி தன் வகுப்பு குழந்தைகளுடன்

குழந்தைகள் எல்லாரும் மாம்பழம்/ ஆரஞ்சு ஜூஸ் குடித்தபிறகு அதிதி கேக் வெட்டினாள். KATI ROLLS, PIZZA ROLLS, BISCUITS, ஓமப்பொடி கொடுத்தோம்.

தோட்டத்தில் musical chair போன்ற சில விளையாட்டுக்கள் நடந்தன. கடையிலிருந்து TATTOO போடும் ஒருவர் வந்து குழந்தைகளின் தோள்களிலும், முழங்கைகளிலும் வர்ணமயமாக TATTOO போட்டு விட்டார். குழந்தைகளுக்கு கும்மாளம்தான். ஏழு மணி சுமாருக்கு எல்லாரும் வீடு திரும்பினர்.

ஸௌம்யாவுடன் அதிதி

அதிதியின் பிறந்த நாள் விழா மிக நல்ல முறையில் நடந்தது. அர்விந்த் - கிருத்திகா சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

ஸ்ரீராமும் சேர்ந்து கொண்டான்

தில்லியிலிருந்து உஷா, கோபாலகிருஷ்ணன், விபா, வீணா ஆகியோர் கலந்து கொண்டனர். வாசுவும் கலந்து கொண்டான்.

அதிதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ராஜப்பா
காலை 11:00 மணி
18-06-2010

Wednesday, June 09, 2010

ஸௌம்யாவும் அதிதியும் LKG-யில்

ஸௌம்யாவும், அதிதியும் தற்போது (2010-11) LKG வகுப்பில் படிக்கின்றனர். அவர்களின் புதிய வகுப்பு 7 ஜூன் 2010 (திங்கள்) அன்று ஆரம்பித்தது.

ஸௌம்யா - அதிதி

அதிதிக்கு காலை 8-30 துவங்கி 11-30 வரை ஸ்கூல். “கிருஷ்ணா” என்ற செக்‌ஷனில் உள்ளாள். அவளது நெருங்கிய தோழி நேயா வேறு செக்‌ஷனில் (காவேரி) படிக்கிறாள். அதிதி தற்போது காலை 7 மணிக்கே எழுந்து, வேக வேகமாக (சிணுங்கிக் கொண்டே) தன் வேலைகளை முடித்து, பேருக்கு ஏதோ சாப்பிட்டு விட்டு, அர்விந்துடன் 8 மணிக்கு கிளம்பி விடுகிறாள். 12 அல்லது 12-30 மணிக்கு வீடு திரும்பி சாப்பிட்டு தூங்கி விடுகிறாள். கிருத்திகா சென்று அவளைக் கூட்டி வருகிறாள்.

ஸௌம்யாவிற்கு 9-00 துவங்கி மதியம் 2-30 வரை ஸ்கூல். SNACKS மற்றும் LUNCH எடுத்துக் கொண்டு குழந்தை ஸ்கூல் செல்கிறது. போகும்போது அருணும், வரும்போது காயத்ரியும் ஸ்கூலிற்கு செல்கின்றனர். 4 வயசு குழந்தைக்கு 5, 5 1/2 மணி நேர படிப்பு தேவையா? !

ராஜப்பா
9-6-2010
10:30 AM

Tuesday, May 18, 2010

ஸௌம்யாவிற்கு இன்று நாலு வயசு ..

ஸௌம்யாவிற்கு\ நேற்று (17-05-2010) 4-வது பிறந்த நாள் மிக விமரிசையாக நடந்தேறியது.

விஜயாவும் நானும் மாலை 4-45க்கு அருண் வீட்டிற்குப் போனோம். அடுத்து, அர்விந்த், கிருத்திகா, அதிதி வந்தனர். பின்பு பாலு மாமா ஆகியோர் வந்தனர்.

 7 மணிக்கு ஸௌம்யா கேக் வெட்டினாள்; அதிதி மிகவும் உற்சாகத்துடன் அவளுக்கு உதவினாள். ஸ்ரீராமிற்கு கேக் வெட்டும் வரை பொறுமை இல்லை; கேக்கை வழித்து வழித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

அருண், காயத்ரி இருவரும் நல்ல ஏற்பாடு பண்ணியிருந்தார்கள். அவர்களையும் சேர்த்து 42 பேர் சாப்பிட்டனர். நல்ல கூட்டம். குலாப் ஜாமூன், சப்பாத்தி,தொட்டுக் கொள்ள டால், போன்ற மூன்று வகைகள், புலவ், பச்சடி, தயிர் சாதம், சில பேர்களுக்கு மட்டும் ஐஸ்கிரீம் .. விருந்து பிரமாதம். (சப்பாத்தி, டால் மட்டும் வெளியிலிருந்து வாங்கினோம்)

சரோஜா, அத்திம்பேர், சுகவனம், சதீஷ் வந்திருந்தனர்.

குழந்தை ஸௌம்யாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

(வரும் ஜூன் 17ஆம் தேதி அதிதியின் பிறந்த நாள்)

முக்கிய குறிப்பு: ஃபோட்டோக்கள் போன வாரம் எடுக்கப்பட்டவை; பிறந்த நாள் அன்று இல்லை



ராஜப்பா
10:15 காலை
18-05-2010

Monday, May 03, 2010

விளையாட்டுகள் மாறுகின்றன

ஏழெட்டு மாதங்களுக்கு முன்னால் அதிதி “டாக்டர் விளையாட்டு” விளையாடுவதில் மிகவும் ஆர்வமாக இருப்பாள். அவள்தான் “டாக்டர்” - நானோ, விஜயாவோ patients. வந்திருக்கும் நோயைப் பற்றி மட்டுமல்லாமல் என்னுடைய அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி பெயர்களையும் கேட்டு விட்டு ”மருந்து” தருவாள்.

பின்னர் இந்த விளையாட்டு மறந்து, ஸ்கூல் விளையாட்டு ஆரம்பித்தாள். அவள்தான் “ஆச்சார்யா” (ஆசிரியை) - நான் மாணவன். இந்த விளையாட்டுடன் கூடவே “ராமர், லக்ஷ்மணர்” விளையாட்டும், “கிருஷ்ணன் - பலராமன் - யசோதா” விளையாட்டும். அவள் ராமர், நான் லக்ஷ்மணன், விஜயா கௌசல்யா! கிருஷ்ணர் விளையாட்டில், அவள் கிருஷ்ணன், நான் பலராமன், விஜயா யசோதா. இந்த இரண்டு விளையாட்டின் போதும் அவள் என்னை மூச்சுக்கு மூச்சு “டா” போட்டுத்தான் பேசுவாள் (என்னடா பலராமா, என்னடா ல்க்ஷ்மணா).

தற்போது (ஏப்ரல் 2010) அவள் டான்ஸ் ஆடுவதில் மிகவும் ஆர்வம் காட்டுகிறாள். பழைய தமிழ் சினிமா பாடலகளை (”பிருந்தாவனமும் நந்தகுமாரனும்”) விஜயா பாட வேண்டும்; அவள் ஆடுவாள். நன்றாகவே ஆடுகிறாள்.

அடுத்த விளையாட்டு என்னவாக இருக்கும்?

ராஜப்பா
காலை 10:30
03-05-2010

Saturday, April 10, 2010

Sowmya, Aditi promoted to LKG

Both my granddaughters, Sowmya and Aditi, have completed one year at their school (Pre-KG). Now, they have been promoted to the higher LKG class. Their schools closed on 09 April for summer vacation and will re-open in June.

They have to be in the school (from the new academic year) at 0830! Oh God, how can these kutties manage to rise so early? More importantly, their parents??

rajappa
11.00 AM
10-4-2010

Thursday, April 08, 2010

Sriram is two years ...

Sriram Arun completed two years on 7th April 2010. His birthday was celebrated in a nice manner at Arun's place.

Apart from us, there were 14 others attending it - Saroja, Athimber, Sugavanam, Ramaa, Subha (with Mahati and Sughosh), Chandar (with Dhanush), his parents, Sitalakshmi Periyamma, Revathy, her three daughters, Gopalan Mama. Gayathri's parents are in Bangalore presently.

Everyone came by 5-15PM and Sriram cut the cake to the cheers of all. Vijaya had prepared Gulab Jamun. After greeting the child all left. We two, Arvind, Krithika, Aditi, Meena, Sankar, and Arun family had a nice dinner - chappati-Kurma, Channa Pulao-raitha, Thayir Saadam.

A great day. God Bless the children.

Rajappa
09:30 AM
08 April 2010

Wednesday, January 13, 2010

Aditi's Mazhalai Muthu

போன வாரம் (11 ஜனவரி = மார்கழி 27) திருப்பாவையின் “கூடாரை வெல்லும்” என ஆரம்பிக்கும் 27வது பாசுரம். இதைப் பற்றி குழந்தை அதிதியிடம் (3 1/2 வயசு) சொல்லிக் கொண்டிருந்தேன்.

“மூடநெய் பெய்து முழங்கை வழிவார” என ஊற்றிய நெய் முழங்கை வரை வழியும் எனச் சொன்னேன். கேட்டுக் கொண்டிருந்தாள். அடுத்த நாள் அவள் தக்காளிப் பழத்தை முழுசாக சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். திடீரென “தாத்தா! நெய் மாதிரியே தக்காளி ஜூஸும் முழங்கை வரை வழிகிறது !!” என்றாளே பார்க்கணும் …

ராஜப்பா
13-01-2010
1000 மணி