Sunday, December 07, 2008

ஸௌம்யா ஆஸ்பத்திரியில் ... Sowmya

ஹாஸ்பிடலில் ஸௌம்யா

ஸௌம்யா RA Puram எங்கள் வீட்டிற்கு டிச 4ஆம் தேதி வியாழன் காலை வந்தாள். காயத்ரியும், ஸ்ரீராமும் கூட வந்தனர். வரும்போதே ஸௌம்யாவிற்கு கொஞ்சம் உடல் நலமில்லாதிருந்தது.

மறுநாள் டிச 5 ஆம் தேதி காலை முதலே அவள் ஒன்றும் சாப்பிடாமல், தண்ணீர் கொடுத்தால்கூட அதை வாந்தியெடுத்துக் கொண்டு --- அழுதுகொண்டேயிருந்தாள். மாலை 5 மணிக்கு அவளை காயத்ரியும் விஜயாவும் டாக்டரிடம் கூட்டிச் சென்றார்கள். டாக்டர் இல்லாததால், தங்கள் வழக்கமான டாக்டருக்கு போன் பேசி அவரது ஆலோசனையின் பேரில், குழந்தையை, மந்தைவெளி தேவநாதன் வீதியிலுள்ள "ஸ்ரீரங்கா ஹாஸ்பிடலில்" அட்மிட் செய்துவிட்டு, எனக்குப் போன் பண்ணினார்கள்.

ஆபிஸிலிருந்து அருண் வந்ததும், அவனும், நானும், ஸ்ரீராமை தூக்கிக்கொண்டு ஹாஸ்பிடலுக்குப் போனோம். ஸௌம்யாவிற்கு IV Fluid (drips) ஏற்றிக்கொண்டிருந்தார்கள். கிழித்துப்போட்ட நாராக குழந்தை படுத்திருந்ததைப் பார்த்து மனசு உடைந்து போயிற்று.


இந்த போட்டோ டிச 3 ஆம் தேதி எடுத்தது


பிறகு, நான், விஜயா, காயத்ரி, ஸ்ரீராம் ஆகியோர் வீட்டிற்கு வந்து, அருணுக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொண்டு நானும், விஜயாவும் மீண்டும் இரவு 10 மணிக்கு ஹாஸ்பிடல் சென்றோம். ஸௌம்யா அப்போது கொஞ்சம் தேறியிருந்தாள்.

இரவு 10-30க்கு அர்விந்த் (டில்லி சென்றிருந்தான்) அங்கு வந்தான்; அவனுடன் நாங்கள் வீடு திரும்பினோம்; அருண் இரவு அங்கேயே தங்கினான்.

மறுநாள் (டிச 6) காலை ஏழு மணிக்கு காபி எடுத்துக்கொண்டு நான் ஹாஸ்பிடல் சென்றேன். ஸௌம்யா தேறியிருந்தாள். மீண்டும் 10 மணிக்கு நானும் காயத்ரியும் ஹாஸ்பிடலுக்குச் சென்றோம் (அருணுக்கு டிபன்). ஸ்ரீராமை விஜயாவும் கிருத்திகாவும் பார்த்துக்கொண்டார்கள்.

காலையிலேயே டிஸ்சார்ஜ் பண்ணுவதாகச் சொல்லியிருந்த Dr Madhavan, Paediatrist, ஸௌம்யாவை டிஸ்சார்ஜ் செய்தபோது பகல் 1-45 ஆகிவிட்டது. வீட்டிற்கு வந்து சாப்பிட்டோம். குழந்தை ஸௌம்யா நன்கு தேறியிருந்தாள்.

இப்படியாக, ஸௌம்யா ஆஸ்பத்திரியில் 18 மணி நேரம் இருந்தாள் (Fees = 1200.00)

rajappa
08-30am 7-12-2008

Saturday, December 06, 2008

ஸ்ரீராம் நிற்கிறான் - நடக்கிறான் Sriram

போட்டோக்கள் 03 டிசம்பர் 2008 அன்று எடுத்தவை

ஸ்ரீராம் நிற்கிறான் - நடக்கிறான்.

இந்த டிசம்பர் 7ஆம் தேதிக்கு (2008), குழந்தை ஸ்ரீராமிற்கு எட்டு மாசம் முடிகிறது. (பிறப்பு : 07-04-2008)


அவன் தற்போது வீடு முழுதும் வேகவேகமாகத் தவழ்கிறான் - இருக்கும் குப்பைகளை வாயில் போட்டுக்கொள்ள முயலுகிறான். பிடித்துக்கொண்டு நிற்கிறான் - நடக்கிறான். ரொம்பத் துறுதுறு.
ராஜப்பா
06-12-2008 காலை 09-40 மணி

Friday, December 05, 2008

அதிதி ஸ்லோகம் சொல்கிறாள் Aditi

அதிதி ஸ்லோகம் சொல்கிறாள் Aditi

நேற்று (04-12-2008) வியாழக்கிழமை காலை மணி 9 இருக்கும். குளித்துவிட்டு வந்த அதிதி 2 டவல்களை எடுத்து வந்து, ஒன்றை தன் பாட்டியிடம் (விஜயா) கொடுத்தாள்; இன்னொன்றை தான் வைத்துக்கொண்டாள். பாட்டியிடம் விபூதி இட்டுக்கொண்டாள்.

ஸ்வாமிக்கு எதிரில் அழகாக சப்பணமிட்டு கீழே உட்கார்ந்தாள்; துண்டை தன் கால்கள்மீது விரித்துக்கொண்டாள். (பாட்டுப் பாட கீழே உட்காரும்போது அதிதிக்கு தன் கால்கள் வெளியே தெரியக்கூடாது - இதில் அவள் மிக கவனமாக இருப்பாள்) பாட்டியையும் அவ்வாறே துண்டை விரித்துக்கொள்ள சொன்னாள்.
பின்னர் ஆளுக்கு ஒன்றாக இரண்டு ஸ்லோக புஸ்தகங்களை கொடுத்தாள். தனக்குத் தெரிந்த ஸ்லோகங்களை சொல்ல ஆரம்பித்தாள் - பாட்டியும் அதே ஸ்லோகத்தை திருப்பி சொல்ல வேண்டும். இரண்டு பேருமாக சேர்ந்து சுமார் 10-15 நிமிஷங்கள் நிறைய ஸ்லோகங்கள் சொல்லி முடித்த பிறகே எழுந்து கொண்டாள்.
ஆண்டவன் குழந்தையை ஆசீர்வதிப்பார்.

ராஜப்பா
5-12-2008 12:30 மணி

Monday, November 17, 2008

அதிதியும் ஸௌம்யாவும் Aditi and Sowmya

அதிதியும் ஸௌம்யாவும்

நேற்று (16 நவம்பர்) மாலை 6 மணியிருக்கும். என்னுடைய மொபைல் போன் அழைத்தது. போனை காதில் வைத்தால், அந்த முனையில் ஸௌம்யா - "பாட்டி, நான் ஸ்லோகம் சொல்றேன்" னு,

Mudakaraatha Modakam

Sada Vimukti Saadhakam

Kalaadharaavatamsakam

Vilasiloka Rakshakam

Anaaya Kaika Naayakam

Vinasitebha Daityakam

Nataasubhasu Naashakam

Namaami Tham Vinaayakam. என்று ஆரம்பிக்கும் ஸ்ரீசங்கராச்சாரியாரின் மஹா கணேஷ பஞ்சரத்னம் ஸ்லோகத்தின் முதல் இரண்டு ஸ்லோகத்தை தடதடவென சொல்லுகிறாள் !!

மகிழ்ச்சியிலும், வியப்பிலும் எங்கள் இருவருக்கும் பேச்சே வரவில்லை. ஸௌம்யாவிற்கு இன்று (17 நவ) 2 வயசும் 6 மாசமும்தான் ஆகிறது. விநாயகர் அவளுக்கு பூரண அருள் புரியட்டும்.

இந்த அதிதி இருக்கிறாளே, அவ்ளுக்கு இன்று 2 வயசும் 5 மாசமும் ஆகிறது. குழந்தைக்கு, இந்த ஸ்லோகமும் இன்னும் 4-5 ஸ்லோகங்களும் தெரியும். சதா சர்வ காலமும் "ஓம் நமோ நாராயணாய" தான். " ஏனடி, தாத்தா பேரை சொல்றே" ன்னு வேடிக்கையா கேட்டா, " நீ என்ன, விஷ்ணு உம்மாச்சியா? நீ தாத்தா தானே !" என திட்டவட்டமாக அறிவித்து விடுவாள்.

ரெண்டு பேருமே ரொம்ப சமத்துக்குழந்தைகள். ஆண்டவன் ஆசி புரியட்டும்

ராஜப்பா தாத்தா
12:35 17-11-2008

Thursday, October 16, 2008

ஸ்ரீராம் நீஞ்சுகிறான்

ஸ்ரீராம் நீந்தி வருகிறான்.






எங்கள் பேரன் ஸ்ரீராம் (ஏப் 7, 2008) தற்போது நன்றாக நீந்துகிறான். துறுதுறுவென பார்த்துக் கொண்டு குழந்தை நீஞ்சுவது கண்கொள்ளா காட்சி. 14 அக்டோபர் 2008 அன்று அவன் நீந்துவதை இங்கு பார்க்கவும்.

15 அக்டோபர் 2008 அன்று குழந்தை Sriram முதன்முதலாக உட்கார ஆரம்பித்தான்.


குழந்தை ஸ்ரீராமுடன் நானும், விஜயாவும் (21 ஆகஸ்ட் 2008 அன்று)



ராஜப்பா
16-10-2008 09:15 காலை

Tuesday, October 14, 2008

அதிதியின் மழலைகள்

அதிதியின் மழலைகள்

இதெல்லாம் 2008 செப்டம்பர் இறுதி, அக்டோபர் முதலில் நடந்தவை.

# 1. இரவு 10-15க்கு, விரித்திருந்த பாயில் சப்பணம் இட்டு அழகாக உட்கார்ந்த அதிதி, பாட்டியையும் தன் பக்கத்தில் உட்காரச் சொல்லி பாட்டு பாட ஆரம்பித்தாள். பின்னர், அர்விந்தையும், கிருத்திகாவையும் கூப்பிட்டு "ஒக்காந்துக்கோ அப்பா, ஒக்காரு அம்மா" என்று கட்டாயமாக உட்கார வைத்தாள். பிறகென்ன, அடுத்த 30 நிமிஷத்திற்கு இன்னிசை மழைதான், அழகிய மழலையில் !!

# 2. அடுத்த நாள் இரவு எங்கள் அறைக்கு வந்து, "நான் தான் தாத்தாவுக்கு காலில் எண்ணெய் தடவி விடுவேன்; பாட்டி நீ ஒக்காந்துக்கோ !" என்று பாட்டிக்கு அன்புக் கட்டளை போட்டுவிட்டு, தன் பிஞ்சுக் கையால் எனக்கு எண்ணெய் தடவி நீவி விட்டாள். இது போன்ற சேவைகளுக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

# 3. இது இன்னொரு நாள் மாலை. என்னையும், விஜயாவையும் உட்கார வைத்து, பாத்திரத்திலிருந்த புளியோதரையை கரண்டியில் எடுத்து, தன்னுடைய இடது கையால் என்னுடைய (ம்ற்றும் விஜயாவினுடைய) வலது கையை தாங்கிக்கொண்டு, என் கையில் ஒரு தாயின் அல்லது பாட்டியின் பரிவு, பாசத்தோடு புளியோதரையை கொடுத்தாள். So much kindness, so much compassion in her eyes !! நாங்கள் சாப்பிட சாப்பிட, "இன்னும் கொஞ்சம் சாப்பிடு தாத்தா," "இன்னும் கொஞ்சம் பாட்டி" என்று போட்டுக்கொண்டேயிருந்தாள். அன்று, என் வயிறு மட்டுமா நிரம்பியது என்று நினைக்கிறீர்கள் , மனஸே நிரம்பியது.

# 4. இன்னொரு மாலையில், விஜயாவின் முழங்கையில் ஒரு சின்ன காயத்தை அதிதி பார்த்து விட்டாள். அவ்வளவுதான் - "பாட்டி ! வ்ந்து என் பக்கத்திலே ஒக்காந்துக்கோ; க்ரீம் தடவி விடறேன்" "நானே ஒனக்கு மம்மம் போடறேன்"னு சொல்லி, பாட்டி கையிலே ரெண்டு கரண்டி தயிர் சாதம் போட்ட பிறகே, குழந்தை சமாதானம் ஆனாள்.

GOD Bless Aditi, our Darling

Rajappa
10:30am 14 Oct 2008

Sunday, October 05, 2008

பேத்திகளின் மழலை முத்துக்கள்

பேத்திகளின் மழலை முத்துக்கள்.
Sowmya, Aditi, Easychair

# 1. "ஒங்க வீட்டிலே தாத்தா-பாட்டி இருக்கா மாதிரி, என்னோட வீட்டிலேயும் தாத்தா-பாட்டி இருக்காளே!"

இது தனுஷிடம் ஸௌம்யா பெருமையுடன் சொன்னது. இந்தக் குழந்தைகளுக்குத்தான் தாத்தா-பாட்டி மேலே என்ன பெருமை! நாங்கள் ஸௌம்யாவின் வீட்டில் எப்போதும் இருப்பதில்லை என்ற வருத்தமும் குழந்தையின் இந்த செயல்பாட்டில் தெரிகிறது.

# 2. "நீயும் பெங்களூர் போயிட்டு வாயேன்," என்று ஸௌம்யாவிடம் சொன்னபோது, கன்னத்தில் கையை வைத்துக்கொண்டாள் - "பெங்களூருக்கு போலாமா, இல்லே இங்கேயே இருக்கலாமா, யோசிச்சிண்டு இருக்கேன் !"

# 3. "என்னோட பேசு தாத்தா," அதிதி சொன்னபோது 'நான் இங்கேதானே பேசிண்டு இருக்கேன்"னு பதில் சொன்னேன். "என் பக்கத்திலே உக்காந்திண்டு என்னோட பேசு தாத்தா !" - இது அதிதியின் மறுமொழி.

# 4. ஒரு இரவுப்போதில் அதிதி ஈஸிசேரிலேயே வாந்தி எடுத்துவிட்டாள். ஈஸிசேரை சுத்தம் செய்வதற்காக அதன் துணியை கழட்டியது அதிதி பார்க்கவில்லை. 2 நிமிஷம் கழித்து துணி இல்லாததை பார்த்த அதிதி, "தாத்தா, ஈஸிசேர் ஒடஞ்சி போச்சி தாத்தா, நான் இனிமே எங்க படுத்துப்பேன் தாத்தா?" அழுது தீர்த்து விட்டாள். அடுத்த நாள், சுத்தம் செய்தபின் துணியை போட்டதும், அதிதி "ஹை, ஈஸிசேர் நன்னா ஆயிடுத்து" என சந்தோஷத்தில் குதித்து அதில் ஓடிப் போய் படுத்துக்கொண்டாள். "பாட்டியும், தாத்தாவும் ஈஸிசேரை நன்னா பண்ணிட்டா" அப்பிடின்னு அர்விந்த்கிட்டே சொல்லி சந்தோஷப்பட்டாள்.

rajappa
11:40am 5 Oct 2008

Tuesday, September 09, 2008

Aditi's Love and Anguish

எங்கள் வீட்டு பழைய சோபா செட், உணவு மேஜை, கட்டில்கள் ஆகியவற்றை நேற்று (8 செப் 2008) விற்று விட்டோம். பகல் 2 மணிக்கு ஆட்கள் வந்து எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு போனார்கள்.

ஆட்கள் வருவதையும், சோபா நாற்காலிகளை எடுத்துக் கொண்டு போவதையும் பார்த்துக் கொண்டிருந்த எங்கள் அதிதி திடீரென அழ ஆரம்பித்தாள். "எடுத்திண்டு போக வேணாம்"னு ஒரே அழுகை.

பின்னர் ஆட்கள் டைனிங் டேபிளை எடுக்க ஆரம்பித்ததும், அவள் விக்கி விக்கி அழ ஆரம்பித்து விட்டாள்; "நாம்ப எங்க சாப்பிடுவோம்?" என அழுதாள்.

(டைனிங் டேபிள் பற்றிய எனது பதிவு இங்கே படிக்கலாம்)

பெட்ரூமிற்கு வந்து, கட்டில்களை எடுக்க ஆரம்பித்ததும், அவளது அழுகை கட்டுமீறி போய் விட்டது. "வேண்டாம், வேண்டாம், தாத்தா - பாட்டி எங்க படுத்துப்பா?"-ன்னு அழுகையான அழுகை. அவள் அழுவதைப் பார்த்து, என் கண்களிலும் நீர் நிரம்பியது.

2 வயசுதான் ஆகிறது, குழந்தைக்கு என்ன ஒரு பற்று, என்ன ஒரு பாசம் !!

Aditi and Sowmya (Jul 2008)


Aditi with her Paatti

ஆண்டவன் அவளை ஆசிர்வதிக்கட்டும். God Bless you Aditi darling.

Rajappa
6-15PM on 9 Sep 2008

Friday, August 29, 2008

Recent Photos of SRIRAM

SRIRAM
(July - August 2008)






SRIRAM







SRIRAM on 21 August 2008



SRIRAM with SOWMYA

SRIRAM







Wednesday, June 18, 2008

அதிதியின் இரண்டாவது பிறந்த நாள் Aditi

அதிதியின் இரண்டாவது பிறந்த நாள் விழாவை நேற்று (ஜூன் 17, செவ்வாய்க்கிழமை) மாலை எளிய முறையில் கொண்டாடினோம்.

கிருத்திகாவின் அம்மா ஹாஸ்பிடலில் இருக்கிறபடியால், 15ஆம் தேதி ஞாயிறு அன்று கோலாகலமாக கொண்டாட திட்டமிருந்தபடி பண்ண முடியவில்லை. அன்றைய விழாவை கடைசி நிமிஷத்தில் நிறுத்தி விட்டோம்.

17-ஆம் தேதி மாலை கேக் வாங்கி வந்து, பலூன் கட்டி, எளிய முறையில் வீட்டிலேயே கொண்டாடினோம். அதிதி புது ட்ரெஸ், நாங்கள் வாங்கிக் கொடுத்த காது வளையம் போட்டுக் கொண்டு கேக் வெட்டினாள். விஜயா குலாப் ஜாமூன் பண்ணினாள்.

அருண், காயத்ரி, ஸௌம்யா, ஸ்ரீராம் ஆகியோர் வந்திருந்தனர். சாவித்திரியும் இருந்தாள்.

முன்னதாக, காலையில் குழந்தையைக் கூட்டிக் கொண்டு அர்விந்த் ஸ்ரீகபாலீஸ்வரர் கோயிலுக்கு சென்று அர்ச்சனை பண்ணி வந்தான்.

God Bless Aditi on her birthday

ராஜப்பா
12:15 18-06-2008

Thursday, June 12, 2008

Aditi in Play school

Aditi was put in a Play school - BAMBOOLA - in RA Puram Chennai on Monday, 9th June 2008. The school timings are from 0930 to 1130 am. Exorbitant fees !

The child is not even two years' old but she has started going to school already. A pity.

Some photos are here - Aditi in Bamboola play school.


Photos taken on 11-06-2008









Rajappa
7-30PM on 12 June 2008

Saturday, May 31, 2008

அதிதி தந்த புளியோதரை Aditi

முன்பே எழுதியிருக்கிறேன் (படிக்கவும்) - அதிதியும் ஸௌம்யாவும் நெறய்ய பேசுகிறார்கள் என்று. அதிதியின் மழலை மணிக்கு மணி கூடிக்கொண்டே போகிறது.

தானாகவே கற்பனை பண்ணிக் கொண்டு தனக்குத் தானே விளையாடிக் கொள்வதில் அதிதி திறமைசாலி.

நேற்று இரவு (30-5-2008) அவள் "தாத்தா, ஒனக்கு மம்மம் வேணுமா? " என்று என்னைக் கேட்டாள். "ஆமாம் " என்றேன். என்ன செய்கிறாள் எனப் பார்த்துக் கொண்டிருந்தேன். தானாகவே டிரெஸ் போட்டுக்கொண்டாள் (பாவனைதான்); பின்னர், உம்மாச்சியை கைகூப்பி வேண்டினாள். (கோயிலில் இருக்கிறாளாம்!); உம்மாச்சி விபூதி இட்டுக் கொண்டாள் (வாயில் போட்டுக் கொள்ள மறக்கவில்லை); கஜானனம் பூத கணாதி ... ஸ்லோகம் சொன்னாள்; விழுந்து நமஸ்காரம் பண்ணினாள்.

கோயில், மம்மம் - இரண்டுக்கும் என்ன சம்பந்தம் இருக்கக் கூடும்? இருங்கள், இதோ அதிதி எங்கே போகிறாள்? கட்டில் படுக்கை மீது 4 அடி எடுத்து வைத்த அவள், தன் சட்டை பாக்கெட்டிலிருந்து "அம்பது ரூபாய் காசு " எடுத்தாள் (பாவனைதான்). கையை நீட்டி, "மம்மம் தாங்கோ " என்றாள்.

கையில் வாங்கிக் கொண்டு, அதை என்னிடம் "தாத்தா, மம்மம் இதோ" என்று கொடுத்தாள். என்ன, புரிகிறதா? நேற்று சாயங்காலம் அவள் தன் அம்மாவுடன் மயிலாப்பூர் ஸ்ரீகற்பகாம்பாள் ஸமேத ஸ்ரீகபாலீஸ்வரர் கோயிலுக்கு போயிருக்கிறாள்.

ஸ்வாமி தரிசனத்திற்குப் பிறகு பிரசாதம் விற்பனை இடத்திற்கு போய், பணம் கொடுத்து புளியோதரை வாங்கி வந்தார்கள். (கொசுறுச் செய்தி: இந்தக் கோயில் புளியோதரை மிக ருசியாக இருக்கும்) எல்லாவற்றையும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த அதிதி இதையே எனக்குப் பண்ணிக் காட்டி "மம்மம்" கொடுத்தாள்.

நிஜ புளியோதரையை விட, குழந்தையின் இந்த மம்மம் புளியோதரை பல மடங்கு ருசியாக இருந்ததில் வியப்பு ஒன்றுமில்லை.

God Bless Aditi. God Bless Sowmya, SRIRAM

ராஜப்பா
12.45 31-5-2008

Wednesday, May 28, 2008

அதிதியும் ஸௌம்யாவும் - Aditi and Sowmya

அதிதியும் ஸௌம்யாவும்.

என்னுடைய பெரிய பேத்தி ஸௌம்யாவின் இரண்டாம் பிறந்த நாள் - தமிழ் நட்சத்திர (பூராடம்) பிரகாரம் நாலு நாட்களுக்கு முன்னால் மே 24-ஆம் தேதி வந்தது. (குழந்தையின் ஆங்கில முறை பிறந்த நாள் மே 17-ஆம் தேதி - இங்கே படிக்கவும்).

அன்று மாலை கோயிலுக்குச் சென்று வந்த குழந்தை எங்கள் வீட்டிற்கு வந்தாள். "இப்ப என்ன பண்ணனும், ஸௌம்யா?" என அவள் அப்பா கேட்டதும், குழந்தை ஓடி வந்து, "தாத்தா, பாட்டி"-ன்னு எங்களை கூப்பிட்டு, இருவருக்கும் விழுந்து நமஸ்காரம் பண்ணினாள் !! வியப்பிலும், மகிழ்ச்சியிலும் என் மனம் துள்ளியது. தூக்கி, உச்சிமோர்ந்து முத்தமிட்டேன். விழிக்கடையில் ஒரு முத்து முகிழ்த்தது.

கடவுள் அவளை ஆசிர்வதிக்கட்டும். God Bless Sowmya.

இளைய பேத்தி அதிதியும் நெறய்ய பேசுகிறாள். "என்ன என்ன என்ன" என்று கேள்வி மயம்தான். நேத்திக்கு (27-05-2008) அவள் இரண்டு புதிய வார்த்தைகளை கற்றுக் கொண்டிருக்கிறாள் - "ஓஹோ", "அப்படியா".

"என்ன", "என்ன" இப்படி பல என்ன-க்களுக்குப் பிறகு, "ஓஹோ" என்று அவள் முடித்த விதம் இருக்கிறதே, சொல்லி மாளாது. (படிக்கும் நீங்களும் "ஓஹோ" என்கிறீர்களா?"

God Bless Aditi

Rajappa
11.00am 28 May 2008

Sunday, May 18, 2008

ஸௌம்யாவின் இரண்டாம் பிறந்த நாள். Sowmya Birthday

ஸௌம்யா பிறந்து இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன - இப்போதுதான் பிறந்தாள் போலத் தோன்றுகிறது, அதற்குள்ளாகவே இரண்டு ஆண்டுகளா!?
Sowmya, Birthday அவளது முதல் பிறந்த நாள் கொண்டாட்டம் இங்கே படிக்கவும்.

குழந்தையின் இரண்டாம் பிறந்த நாளை நேற்று (17 மே 2008) அடையாறில் (காயத்ரியின் அப்பா-அம்மா வீட்டில்) மிக விமரிசையாக் கொண்டாடினோம்.

நான், விஜயா, கிருத்திகா, அதிதி, சாவித்திரி, ரமேஷ், கார்த்திக் ஆகியோர் எங்கள் வீட்டிலிருந்து மாலை 5-45க்குக் கிளம்பிப் போனோம். அர்விந்த் அமெரிக்கா சென்றுள்ளான்; அஷோக், நீரஜா வரவில்லை. GBS பக்கத்திலிருந்து சுமார் 20 பேர் இருந்தனர்.

மாலை 6-30க்கு ஸௌம்யா கேக் வெட்டினாள். பெரிய கேக், அருண் தனது ஹோட்டலிலிருந்து ஆர்டர் செய்திருந்தான். அதிதிக்கும் கேக் வெட்ட ஒரே ஆசை! (அடுத்த மாசம் அவளது பிறந்த நாள் வருகிறது.) காயத்ரியின் அம்மா சாம்பார் சாதம், தயிர் சாதம், கோஸ் கறி, பருப்பு வடை செய்திருந்தாள். ஹோட்டலிலிருந்து அருண் காரட் ஹல்வா வாங்கி வந்திருந்தான்; விஜயா அஷோகா ஹல்வா செய்தாள்.

ஸௌம்யாவிற்கு எங்கள் பரிசாக ஒரு காது-வ்ளையம் வாங்கினோம்; 2.25 கிராம் தங்கம்; விலை 3000.00 ஆயிற்று. (அதிதியோடது 2900.00 ஆயிற்று).

இரவு 9-45க்கு நாங்கள் வீடு திரும்பினோம்; இவ்வாறாக, ஸௌம்யாவின் 2-ஆம் பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாடினோம். குழந்தையின் தமிழ் நட்சத்திர (பூராடம்) பிறந்த நாள் மே 24-ஆம் தேதி சனிக்கிழமை வருகிறது.

(போட்டோக்கள் விரைவில்.)

ராஜப்பா
11:15 18-05-2008

Friday, May 09, 2008

என்ன ஒரு அழகான பேச்சு !

What a sweet talk By Aditi and Sowmya !


ஸௌம்யாவும் அதிதியும் மழலையில் கொஞ்சுவதைப் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன் (இங்கே படிக்கவும்).

தற்போது இரண்டு குழந்தைகளுமே மிகவும் சரளமாக, கோர்வையாக, முழு முழு வாக்கியங்களாக் பேசி எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறார்கள். அதுவும் 4, 5 வாக்கியங்களைத் தொடர்ந்து பேசுகிறார்கள்.

நாம் எது சொன்னாலும் உடனே பிடித்துக் கொண்டு விடுகிறார்கள். அனுமார் வால் போல இடைவிடாத கேள்விகள் - "இது என்ன? நீ என்ன பண்ணறே? என்ன மாத்தரே (மாத்திரை tablet) சாப்பிடறே? ஆர் குடுத்தா? எந்த டாக்டர் மாமா குடுத்தா?" இதுபோன்று கேள்விகளுக்கு முடிவே கிடையாது.

காலை எழுந்து குளித்ததும், ஸ்வாமிக்கு முன் நின்று, "கஜாநநம் பூத கணாதி சேவிதம் ---" மற்றும் "மூஷிக வாகன மோதக ஹஸ்த --" மறக்காமல் முழுதும் சொல்லிவிடுவார்கள். "அகர முதல எழுத்தெல்லாம் -- " இதுபோன்ற சில குறள்கள் கூடத் தெரியும். "சஷ்டியை நோக்க சரவண பவனாம் -- " கற்றுக்கொண்டு வருகிறார்கள்.


அதிதிக்கும், ஸௌம்யாவிற்கும் இன்னும் இரண்டு வயசு கூட ஆகவில்லை. ஆண்டவன் குழந்தைகளை ஆசிர்வதிக்கட்டும்.

ராஜப்பா
7-45PM, 09-05-2008

Saturday, May 03, 2008

அதிதி சலூனுக்குப் போகிறாள்

Aditi's First Hair Cut

அதிதியின் தலைமுடி எக்கச்சக்கமாக வளர்ந்துள்ளது. சென்னையின் கோடை வெப்பத்தில் குழந்தைக்கு இன்னும் அதிகமாக வேர்த்து விடுகிறது.

மே மாதம் (2008) 2-ஆம் தேதி காலை அவளைக் கூட்டிக்கொண்டு அர்விந்த் சலூனுக்குப் போனான். முதல் முறையாக அதிதி தலைமுடி வெட்டிக்கொண்டாள். (அவள் அம்மா வெட்டி விட்டதை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை). நிறய்ய அழவில்லை.

எதிர்பார்த்தது போலவே அதிதியின் முகம் மாறிவிட்டது, ஆனால் ரொம்ப மாறவில்லை. போட்டோக்களை பாருங்கள்.

Before Haircut


after


Aditi, Haircut

ராஜப்பா
7-15PM 3-5-2008

Saturday, April 19, 2008

பேரன் புண்யாஹ வசனம் SRIRAM PUNYAHA VACHANAM

எங்கள பேரனின் புண்யாஹ வசனம் ஏப்ரல் 17 (2008) வியாழக்கிழமை வெகு சிறப்பாக நடந்தேறியது.

குழந்தைக்கு ஸ்ரீராம் (SRIRAM) என்று பெயர் வைத்துள்ளோம். அழகான பெயர்.

காலை 8 மணிக்கே நானும் விஜயாவும் அடையாறு சென்று விட்டோம். காப்பரிசி பண்ணி எடுத்துக் கொண்டு போனோம். அங்கு யாவரும் - ஸௌம்யா உள்பட - குளித்து தயாராக இருந்தனர். ஜெயராமன், கல்யாணி


முதலில் வந்தனர். பூர்ணிமாவை வீட்டிலேயே விஜய் துணையுடன் விட்டுவிட்டு வந்தனர் - இதுவே முதல் தடவை. பின்னர் சரோஜாவும் அத்திம்பேரும் வந்தனர். 9-15 க்கு வாத்தியார் வந்தார், புண்யாஹவசனத்தை ஆரம்பித்தார்.

9-30க்கு அதிதி, கிருத்திகா, மாமா, மாமி வந்தனர். (மங்களம், பத்மா வரவில்லை. சுகவனம், சுதா பூனா சென்றுவிட்டனர். அர்விந்த் பாங்காக் சென்றுள்ளான். அஷோக், நீரஜாவும் வரவில்லை). காயத்ரி அம்மா வழியில் அக்கா, அத்திம்பேரை தவிர வேறு யாரும் வரவில்லை. எல்லாரும் ராம நவமிக்காக் துறையூர் சென்று விட்டனர். அப்பா வழியில் வந்திருந்தனர். மொத்தம் 35 - 40 பேர் இருந்திருப்போம். கூட்டம் குறைவுதான் - ஸௌம்யாவின் புணயாஹவசனத்தின் போது (27 May 2006) 100 -120 பேர் என ஜேஜே என்றிருந்தது.


அதிதியும், சௌம்யாவும் புதுப் புது டிரெஸ் போட்டுக்கொண்டனர். தம்பிப் பாப்பாவை சுற்றி சுற்றி வந்தனர் - ஆனால், அவன் தூங்கிக் கொண்டே இருந்தான்.

குழந்தையும் அப்பாவும் (ARUN) ஒரே நட்சத்திரத்தில் (அஸ்வினி) பிறந்திருப்பதால் "ஏக நட்சத்திர ஹோமம்" செய்தார்கள். குழந்தைக்கு நாங்கள் ஒரு தங்க செயின் (8.4 கிராம் @ 1115.00) வாங்கினோம்.

அர்விந்த், அஷோக்கும் செலவில் பங்கு கொண்டனர். வெள்ளிக்காப்பு, தங்கக்காப்பு பழசுதான், ஸௌம்யாவிற்கு வாங்கியது. முக்காப்பு மட்டும் புதுசாக வாங்கினோம். டிரெஸ் நிறைய வாங்கினோம் - ஸௌம்யா, அதிதிக்கும் சேர்த்துத்தான்.



பின்னர் சாப்பாடு - Catering சொல்லியிருந்தார்கள். 35 - 40 பேர் சாப்பிட்டோம். ஜெயராமன் - கல்யாணி புறப்பட்டனர். 2-30க்கு தொட்டில் போட்டனர்.


விஜயாவும், கிருத்திகாவும் குழந்தைக்கு தங்கக்காப்பு, வெள்ளிக்காப்பு, முக்காப்பு, (கறுப்பு) வளையல் போட்டனர். பாட்டுக்கள் பாடி, பின்னர் ஹாரத்தி எடுத்தனர். இவ்வாறாக புண்யாஹ வசனம் சிறப்பாக நடந்தேறியது.

சரோஜா - அத்திம்பேர், கிருத்திகா, அதிதி, மாமா, மாமி வீடு திரும்பினர். 4 மணி சுமாருக்கு நாங்களும் வீடு திரும்பினோம், அருண் காரில். எல்லாருக்கும் போன் செய்து விஷயம் தெரிவித்தோம்.












இன்னும் போட்டோக்கள் இங்கே.

ராஜப்பா
19-04-2008 12:30 மணி